காட்சி 14 / 61
காட்சி—14]
காட்சி—14]
மூல ஸ்கேன் 52, 53
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[திருசங்கு வீடு.
திருசங்கு: என் மானம், மரியாதை, மதிப்பு எல்லாம் மண்ணைப் போய்விடும் வெளியிலே தெரிந்தால்! முத்தாயி—நீ செய்த காரியத்தை யாரும் மன்னிக்க மாட்டார்கள்.
முத்தாயி: மன்னிக்க வேண்டாம் அப்பா—மனதார ஆசீர்வதித்துவிடுங்கள்.
திருசங்கு: என்னையா? என்னையா ஆமோதிக்கச் சொல்கிறாய்! கண்ணைத் திறந்துகொண்டு கள்ளிக் காட்டிலே நடந்துபோவதை எந்த அறிவு கெட்டவனும் ஒப்புக் கொள்ளமாட்டான்.
முத்தாயி: கள்ளிக்காடல்ல அப்பா! காதற் சோலை!
திருசங்கு: வாயை மூடு! காதல் கீதல் எல்லாம் ஏட்டிலே இருக்க வேண்டிய எழுத்து! மடப் பெண்ணே, திருச்சிர நாராயணனிடமா காதல்! பால் வேண்டுமென்று பாம்புப் புற்றிலே கைவிடுவார் களா யாராவது?
முத்தாயி: அப்பா! என் சுகமே உங்கள் சுகம்—என் சந்தோஷமே—உங்கள் சந்தோஷம் என்பீர்களே; நீங்களா இப்படியெல்லாம் பேசுகிறீர்கள். வாழ்வுக் கேற்றவன் தேர்ந்தெடுக்க எனக்கு உரிமை கிடையாதா?
திருசங்கு: உன் வாழ்வுக் கேற்றவன்தான் மாட மாளிகை கூட கோபுரத்தோடு தோன்றுகிறேன். இரும்புப் பெட்டியே உன்னை நாடி வருகிறது! நீ திருவோட்டைத் தேடி ஓடுகிறாய்!
முத்தாயி: அப்பா, சுதந்திரமாக வளர்ந்த என்னை—பாளையக்காரரின் சொத்துக்களைப் பிடிக்கும் சூதாட்டக் காயாக ஆக்கிவிட்டார்கள்.
திருசங்கு: போதும் முத்தாயி போதும்! நீ அந்த அன்னக்காவடிக்கு மாலையிட என் உயிர் உள்ளவரை சம்மதிக்கமாட்டேன். நீ மறுத்தால்—என் பிரேத ஊர்வலம் போன பிறகுதான் உங்கள் கல்யாண ஊர்வலம் போகமுடியும். ஆமாம், ஞாபகம் வைத்துக்கொள்.
★