கட்டுரை 7 / 10

30-1-1948

30-1-1948

அச்சுப் பக்கம் 39–40

scan 39 (the article opening) shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

இந்திய உப கண்டத்தின் வரலாற்றில் இரத்தக் கரை படிந்த நாள். மக்கள் உகுத்த இரத்தக் கண் நீர் அருவி யென ஒடி அரபிக் கடலில் கலந்து...வங்களாக் குடாக்கடலில் “வழிந்தோட......காந்தி மாண்டாரா ?” என்ற கேள்விக்கு முன் கிளம்பிய பெரு மூச்சு இமயத்தை அசைக்க—இப்படி ஒரு சோக பூகம்.

உத்தமர் காந்தியார் சுடப்பட்டார்! மும்முறை. சுடப்பட்டார்! ஐயகோ! சுடப்பட்டார்! பிரார்த்தனைக்குத்தான் வந்தாராம்......வேலும் வாளும் ஏந்தி வேற்றார்படை எங்கே என்று அவர் அதட்டலாக கேட்ட நேரத்தில் அல்ல!......அன்பு தவழும் மொழிகளில் பிரார்த்தனைக்கு மக்கள் வந்துவிட்டனரா என்று வினவிய நேரத்தில்......சுடப்பட்டார் !

கனல் கக்கும் கண்களோடு...கட்டாரியை எறிந்த காட்டானையைப் போல் எதிரியின்மேல் மோதிய வேளையில் அல்ல—கருணை பொங்கும் கண்களால் தன் உபதேசங்கேட்க வந்திருந்த மக்களைக் கண்டானந்தித்த வேளையில்......சுடப்பட்டார் ! சுடப்பட்டார்....சுடப்பட்டார்......சுக்குநூறாக்கம்

30 ந் தேதி மோகனப் புன்னகையார் மோகன் தாஸ் காந்தி!......!31-ந் தேதி......அய்யய்யோ...முறிந்தும் எரிந்தும் போன எலும்புத்துண்டுகள்!...... ஒரு முட்டாள் வீசிய மூன்று குண்டுகள் முரட்டுத் தனத்தையும் மெளடீக மதவெறியையும் போக்குவதற்கு முயன்ற ஒரு தியாகியின் வாழ்வை முடித்தன.

“ஏ ! துப்பாக்கிக் குண்டே !...அந்த துன்மார்க்கன் செய்த துரோக வேலைக்கு நீயும் துணையா ?...எப்படித்தான்...அண்ணல் காந்தியின் அன்பு கனியும் இருதயத்தைப் பிளந்தெறிந்தாயோ ?”...என்று இந்தக் கண்டம் அழுகிறது. ஏன்...உலகமே அழுகிறது.

காந்தியாரின் உயிரை உறிஞ்சியவன் ஒரு பார்ப்பனன், ஆம்...சாம்ராஜ்யங்களை சாய்த்த பரம்பரை! மன்னாதி மன்னர்களை மண்கவிழச் செய்த மரபு!...அந்த இனம் கக்கிய ஒரு துளி விஷம் காந்தியார் உயிரை சூறையாடிற்று. அந்த வைதீகம் வீசிய ஒரு வஞ்சகவாள் வார்தா உத்தமரின் வாழ்வை வெட்டித் தள்ளிற்று. அந்த மதவெறி செய்த சதி......ஒரு மாபெரும் வீரருக்கு மரணத்தீர்ப்பு வழங்கிற்று.......

இந்தியா கண்ணீர் விடுகிறது.........இந்து மகா சபை இனிப்பு வழங்கிற்றாம். ஆச்சரியப்படவில்லை நாம்! ஓமான் கடலில் சர். செல்வத்தின் வாழ்வு சிதைந்த போது சர்க்கரை வழங்கிய ஆரியக் கூட்டம் வாழ்கிற திராவிடத்தில் நாமும் வாழ்வதால்! காந்தியாரின் கொள்கைகளில் நமக்கு கருத்து வேற்றுமையுண்டு. ஆனால் நாம் கல் நெஞ்சர்களல்ல!... காந்தியாரின் தியாகத்தையும் அவர் மேலான உழைப்

பையும்....அவர் ஊக்கத்தையும்...நாம் பாராட்டியவர்கள்!....அதே நேரத்தில் காந்தியாரின் தொண்டு பல பதவி வேட்டைக்காரர்களுக்கும் பனியா......பார்ப்பனர்களுக்கும் பயன் படுகிறது என்றும் சொல்லத் தவறாதவர்கள் !....

காந்தியாரே!......தங்கள் உழைப்பின் பெரும் பகுதியைக் கூலியாகக் கொடுத்து...இக் கண்டத்திற்கு ஓரளவு விடுதலை வாங்கித்தந்தீரே!...விடுதலை...உண்மை விடுதலையாக மாறுவதற்கு முன்...பதவி வேட்டை ஒய்வதற்கு முன் தேசீயத்தில் தெகிடுதத்தம் கலந்து விட்டது என்று தாங்கள் எழுதி...அந்த அறிவுரை ஆட்சியாளரை நல்வழிப் படுத்துவதற்கு முன், நாசத்திற்காளானீரே !....

‘சுதந்தரம்’ கிடைத்த ஆறாவது மாதத்தில்—இந்த அகால சாக்காடா ?—அதுவும் தங்களுக்கா ?—தாங்கள் என்ன மதவெறியை வளர்த்தீர்களா ?—அமைதியைக் குலைத்தீர்களா? அராஜகத்திற்கு காரணகர்த்தாவாயிருந்தீர்களா ?—இல்லையே!—பிறகேன் இந்தப் படுகொலை! மதவெறி—பதவிவெறி பாரப்பனீய வெறி... இது தான் பதிலா ?—சுதந்திர இந்தியாவில்—யாருக்காகப்பாடு பட்டீர்களோ அந்த சமுதாயத்தின் ஒரு மலைப்பாம்பால் விழுங்கப்பட்டீர்கள் என்பது—அவமானம் வெட்கக் கேடு...இந்த உபகண்டத்திற்கேற்பட்ட........ மாறாத இழிச்சொல்!..... நாள் 30-1-1948... ஆமாம்... வரலாற்றை வீணாக்கிய

கலைஞர் மு. கருணாநிதி · உணர்ச்சிமாலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்