கட்டுரை 6 / 13
சிறுவர்கள்
Youngsters
அச்சுப் பக்கம் 35–38
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
ஜி. பி. சோமசுந்தரம் வயது சுமார் அறுபது! கே. கே. நீலமேகம் வயது சுமார் ஐம்பது! பொள்ளாச்சி நடராசு வயது சுமார் அறுபது! பெத்தாம் பாளையம் பழனிச்சாமி வயது ஏறக்குறைய நாற்பது! நெடுஞ்செழியன் சுமார் வயது முப்பது! சேலம் சித்தையன் வயது சுமார் நாற்பது! இ. வி. கே. சம்பத் வயது சுமார் இருபத்தேழு. சி. பி. சிற்றரசு வயது சுமார் நாற்பது! என். வி. நடராசன் வயது சுமார் நாற்பது! பார்த்தசாரதி வயது நிச்சயமாக நாற்பத்திரண்டு! அப்பாதுரையார் வயது சுமார் ஐம்பது! மணிமொழியார் வயது அநேகமாக ஐம்பத்திநாலு! எஸ். வி. லிங்கம் கிழவரே! மூதாட்டி ராமாமிர்தத்தம்மாள் முப்பது வயது! (இரட்டையில்) அரங்கண்ணல் வயது சுமார் இருபத்திரெண்டு! ஈழத்து அடிகள் வயது சுமார் ஐம்பது! என் வயது சரியாக இருபத்தொன்பது!
மேற்கண்ட வரிசையிலே குறிப்பிடப்படும் வயதுகள் ஜாதகக் குறிப்புப்படியோ வருஷம், மாதம், தேதிப்
படியோ கணிக்கப் பட்டவை அல்ல! பார்வையாலும் உத்தேசத்திலும் சிலரை இதற்கு முன்பு கேட்டிருந்த முறையிலும் ஓரளவுக்கு நினைவு வைத்துக் கொண்டு எழுதப்பட்டவையாகும்!
திடீரென்று என்னப்பா வயதுக் கணக்கில் புகுந்து விட்டாய் என்று கேட்கிறீர்களா? குறிப்பிடப் பட்டவர்களில் ஒருவர் இருவரைத் தவிர எல்லோருமே கல்யாணம் ஆன தோழர்கள்; ஆனபடியால் திருமண அப்ளிகேஷன் என்று யாரும் தவறாகக் கருதவேண்டாம். அப்படிப்பட்ட விவாக விண்ணப்பம் என்றால், வயதுகளைக் குறைத்தல்லவா சொல்லியிருப்பேன்!
மேலே குறிப்பிட்டவர்கள் எல்லோருமே சிறுவர்கள் என்று கூறினால் உங்களுக்குச் சிரிப்பு வருகிறதல்லவா? ஆனால் நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் தான்!
பெரியார் இராமசாமி அவர்கள் முன்பெல்லாம் அடிக்கடி சொல்லுவார்கள்; "எனக்கு வயதானால் கூட என் உள்ளம் இளைஞன் உள்ளந்தான்" என்று! அதைப்போல இளைஞர் உள்ளங் கொண்டவர்கள் தான் தி.மு.கழகத்திலேயுள்ள, கிழவர் வாலிபர் எல்லோருமே. அதுமட்டுமல்ல; தி. மு. கழகத்தின் சட்ட திட்டமே பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களைத்
தான் உறுப்பினராகச் சேர்க்க முடியும் என்று வகுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் எந்தக் காரணத்தாலோ தெரியவில்லை; பாவம் ஜி. பி. சோமசுந்தரமும் பொள்ளாச்சி நடராசு, போன்றவர் சிறுவர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் சர்க்கார் சட்டப்படி 'மைனர்' நீங்கிய பெரியவர்கள்! இதுகூடத் தெரியாமல் இவர்களை சிறுவர்கள் என்று யாரும் அழைத்திருக்க மாட்டார்கள். சிறுவர்கள் என்றால் வயதான காலத்திலும் இளம் இதயம் படைத்தவர்கள் என்று பொருள்!
இளம் இதயம் படைத்தவர், என்றதும் நமது கிழவர் எஸ். வி. லிங்கம்! இவர்கள் திருமணத்திற்கு திட்டம் போடுவார் போல் தெரிகிறது! இல்லை இல்லை.... விளையாட்டுக்குத்தான் சொல்கிறேன்! லிங்கம் அண்ணா நீங்கள் இப்போது எங்கே இருந்தாலும் சரி; அப்படியெல்லாம் எந்த ஏற்பாடும் செய்து விடாதீர்கள்! நீங்கள் எங்கே ஏற்பாடு செய்யப் போகிறீர்கள்! நீங்கள் தான் சாமியாராச்சே! உங்களுக்குச் சொத்தா! சுகமா! வார்சா! மண்ணாங்கட்டியா?
வயதான தோழர்களே? உங்களில் சில பேர் விட்டுப் போயிருக்கலாம். ஆனால், நீங்கள் எல்லாம் சிறுவர்களோ என்று எண்ணி விடவேண்டாம்! இளம் இதயம் படைத்த பெரியவர்கள்! இளம் இதயம் இலட்சிய இதயம்! காதல் இதயமல்ல! ஓகோ கோ! ஒன்றை மறந்து விட்டனே! நமது தளபதி அண்ணா கூட நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்தான்!
Assembly provenance
- scan 37 — publications/perumoochu/pages/0037-siruvargal-1.md
- scan 38 — publications/perumoochu/pages/0038-siruvargal-2.md
- scan 39 — publications/perumoochu/pages/0039-siruvargal-3.md
- scan 40 — publications/perumoochu/pages/0040-siruvargal-4.md
P3 assembly audit
- source scans — 37–40 / 4/4 records - page-record coverage — 4/4 PASS - P2 physical-boundary repair authority — ebe8b2146eef22ac203f8014367cb78dea2d4b76 - physical page boundaries — preserved with scan comments - omitted canonical P2 body text — 0 - added unsupported body text — 0 - modernization / paraphrase — 0 - unresolved assembly issues — 0 - result — P3 COMPLETE / PASS
P5 strict visual review
- every contributing physical source scan was directly rechecked in P5. - current article body was reconstructed from current canonical page records and compared exactly — PASS. - unresolved P5 fidelity discrepancies — 0. - status — STRICT-REVIEWED / FROZEN.
கலைஞர் மு. கருணாநிதி · பெருமூச்சு. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்