கட்டுரை 15 / 26

தமிழே

O Tamil!

அச்சுப் பக்கம் 61–61

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

தமிழே!

உன்னை - உளங்கவர் ஓவியமே! உற்சாகக் காவியமே! ஓடை நறுமலரே! ஒளியுமிழ்ப் புது நிலவே! அன்பே! அழகே! அமுதே! உயிரே! இன்பமே! இனிய தென்றலே! பணியே! கனியே! பசுந்தோகை மயிலே! பழரசச் சுவையே! மரகத மணியே! மாணிக்கச் சுடரே! மன்பதை விளக்கே! - என்றெல்லாம் அழைத்திடத் தோன்றுகிறது.

ஆனாலும் தமிழே! உன்னைத் “தமிழே” என்று அழைப்பதிலே உள்ள இன்பம் வேறு எந்தச் சொல்லிலும் இல்லையென்பேன்.

கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்