காட்சி 55
காட்சி - 55
ஜமீன்தார் அந்தரங்க மாளிகை / வெளிப்புறம்
72 பகுதிகளில்
**ஜமீன்தார் அந்தரங்க மாளிகை** **வெளிப்புறம்** (ஜமீன்தார் ஓடிவருகிறார். — விங்கன், மரகதம், உமா, சடையன், குடிசைவாசிகள், ஊரார் பின் தொடர்தல்—ஓடிவந்த ஜமீன்தார் எதிரில் காளை முறைதவறி நிற்பதைப் பார்க்கிறார்.... ஜமீன்தார் நடுங்குகிறார். ஓடுகிறார் காளை துரத்துகிறது.... ஓடுகிறார்....) ஜமீன்தார்:—விங்கன்!.... அய்யோ என்னைக் காப்பாற்று! விங்கன்:—உண்மையைச் சொல்லும்!.... என் தாயாரை காளை மாட்டுக் கொம்பின்மீது தள்ளிக் கொலை செய்தது நீர் தானே? ஜமீன்தார்:—ஆமாம்.... நான்தான்!? விங்கன்:—மக்களுக்குப் பயன்படக் கூடிய உணவு தானியங்களைப் பதுக்கி வைத்து, அவர்களைப் பட்டினி போட்டு விட்டு கள்ளக் கடத்தல் மூலம் கருப்புப் பணம் சம்பாரித்தது உண்மைதானே? ஜமீன்தார்:—உண்மைதான்!.... உண்மைதான்!.... விங்கன்:—புலவர் மகளைக் கற்பழிச்சு புலவரையும் அவர் மகளையும் தீர்த்துக்கட்டியது உண்மைதானே? ஜமீன்தார்:—உண்மைதான்! உண்மைதான்! சடையா! என்னை நீயாவது காப்பாற்று! சடையன்:—தம்பி! தன் தவறை உணர்ந்து திருந்த நினைக்கிற மனிதனை மன்னிச்சிடுப்பா! ஜமீன்தாரய்யாவைக் காப்பாற்று! விங்கன்:—அழுக்குள்ளம்! அக்கிரம ஆட்டம்! அநியாயச் செயல்கள்! இதனையும் வார்த்தெடுத்த வஞ்சக வடிவங்கொண்ட நீர்... வெளி வேஷத்தாலே! புனிதர்-புண்ணியர்-உத்தமர்-யோகியர்னு இந்த ஊராரை ஏமாற்றியதும் உண்மைதானே? ஜமீன்தார்:—எல்லாம் உண்மைதான்!... என்னை மன்னிச்சிடு விங்கன்!.... (விங்கன் பாய்ந்து சென்று மாட்டைப் பிடித்துத் தள்ளிவிடல்.) விங்கன்:—நான் உங்களை மன்னிச்சா போதாது அய்யா வாங்க... இதோ இங்கு நிற்கிற எல்லோரிடத்திலும் மன்னிப்புக் கேளும்.... (ஜமீன்தார் ஸ்தம்பித்து நிற்கிறார்.) உம்!.... ஏன் தயக்கம்!.... எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்க வெட்கமாக இருக்கிறதா?... (கூட்டத்தில் ஒருவன் கையில் கத்தியிருப்பதைப் பார்த்த ஜமீன்தார்; அதைப் பிடுங்கி விங்கனை வெட்டப்போகிறார்.) உமா:—“அத்தான்” என அலறுகிறாள். அதற்குள் கண்ணாயிரம் காளையைக் கட்டவிழ்த்து விடவே காளை ஜமீன்தார் மீது பாய்கிறது. ஜமீன்தார் ரத்த வெள்ளத்தில் மிதக்கிறார். ★