காட்சி 53-சி

காட்சி - 53 சி

72 பகுதிகளில்

(குடிசைப் பகுதியில் தீப்பந்தங்கள் காளிங்கன் முன்னிலையில் அவன் ஆட்களால் எறியப்படுகின்றன......) (நடனம் ஒருபுறம் - நாசம் ஒரு புறம் மாறி மாறிக் காட்சிகளாகின்றன.) (அழகி ஒன்று நடனமாட ஜமீன்தார் ரசித்தல்.) ஒரு பக்கம் நெருப்பு! மறு பக்கம் நிலவு! இந்த பக்கம் கொண்டது இளமையின் — அழகே அழகு! வல்லினம், மெல்லினம்— இரண்டும் திரண்டு கலந்து புரண்டு வளர்ந்த பெண்ணது! வில்லினம், வேலினம்— இரண்டும் தெரிந்து வளர்ந்து குழைந்து மலர்ந்த கண்ணது! இடையினம் ஒரு கொடி போலே! படர்ந்திட வரும் மடி மேலே! மதுக்குடம் அல்லவோ! பெண்ணுக்குக் கண்ணு! உன் முன்னழகு தள்ளாடுது! — ஒரு பக்கம் காலையில் சூரியன் கிழக்கில் உதிக்கும் வரைக்கும் நமக்கு இனிக்கும் உல்லாசமே! காமனின் சாஸ்திரம் உடம்பில் வரைந்து இருட்டில் விரைந்து படிக்கும் ஒய்யாரமே! அழகிய மலர் இவள் மேனி! அருகினில் ஒரு இசைத்தேனி! அற்புதம் இல்லையோ! அன்றாடும் மன்னு! உன் பொன்னாடம் வந்தாடலா? — ஒரு பக்கம். (குடிசை மக்கள் அங்குமிங்கும் அலறித்துடித்து ஓடுகிறார்கள். விழுகிறார்கள்.... குழந்தைகள் நெருப்பில் கருகுகின்றன. அல்லோலகல்லோலப்படுகிறது. விங்கன் நெருப்பில் விழுந்தவர்களைக் காப்பாற்றுகிறான். கண்ணாயிரமும் அவதிப்பட்டுத் துடிப்பவர்களைக் காப்பாற்றுகிறான். கோகிலாவும் மரகதமும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். விங்கன் காளையை அவிழ்த்துக் கண்ணாயிரத்திடம் கொடுத்து, அதைக் காப்பாற்றும்படி விரட்டுகிறான்... இப்போது கோகிலா, குழந்தையுடன் தனியாக ஓடிக்கொண்டிருக்கிறாள். மரகதம் அங்குள்ள ஏழைபாழைகளை நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள்.)