காட்சி 74]
காட்சி 74·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[கோர்ட்
[பரந்தாமன் கூண்டில் நிற்கிறான்]
பரந்தாமன் : கோர்ட்டார் அவர்களே, கூறியது அத்தனையும் புரிந்தது எனக்கு. தொழிலாளர்களைத் தூண்டிவிட்டேன், போலீசாருக்குத் தொல்லை கொடுத்தேன். என் சுயநலத்திற்காகப் பாட்டாளி சமூகத்தை பயன்படுத்திக்கொண்டேன், அராஜகம் - பலாத்காரம் இவைகளிலே அப்பாவி மக்களை ஈடுபடுத்தும் அரசியல் ஸ்டண்ட் நடத்தினேன் என்றெல்லாம் என்மீது குற்றஞ் சாட்டப்பட்டது. இதற்கெல்லாம் நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் ? ஒரே பதில்- தொழிலாளர்கள் அவர்களாகவே நடத்திய கிளர்ச்சிக்கு நான் எந்த விதத்திலும் தொடர்பு கொண்டவனல்ல. அப்படியே இருந்தாலும் ஒருமுறை எச்சரிக்கை செய்து என்னை மன்னிக்கும்படி கோர்ட்டார் அவர்களிடம் தலைவணங்கி மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.