காட்சி 59]

காட்சி 59·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[ஜெயில்

குமுதா : உங்களை விடுதலை செய்ய எவ்வளவோ முயற்சித்தேன். முடியவில்லை பாண்டியன்....

பாண்டியன் : வருந்தாதே குமுதா ! எனக்கும் விடுதலையில்லாமலா போய்விடப் போகிறது.

குமுதா: பாண்டியன் நான் திக்கற்றவள்.நீங்கள் வரும்வரை எனக்கு யார் கதி

பாண்டியன் : நீயேதான் கதி ! என்னை வெளியூர் ஜெயிலுக்குக் கொண்டு போகிறார்களாம். பரந்தாமன் கண்களில் பட்டுவிடாதே.ஜாக்ரதையா இரு.

குமுதா: பாண்டியன் ! உங்களைப் பிரிந்து எப்படி இருப்பேன்.

(அழல்)

பாண்டியன் : அழாதே குமுதா! அழாதே !... உன்னை சிரித்த முகத்தோடு என் சிந்தை குளிர ஒருமுறை பார்க்கிறேன். எங்கே சிரிப்பு காட்டு!

குமுதா : சிரிக்கவா ? சிறைச்சாலையிலே என் ஜீவனை வாடவிட்டு நான் சிரிக்கவா?

பாண்டியன் : அழாதே குமுதா! மூன்று வருடங்கள் விரைவில் ஓடிவிடும். நான் திரும்பி வந்து உன்னை சந்திக்கும் போது உன் மடியிலிருந்து அப்பா என அழைக்கும் மழலைச் செல்வத்தை வாரி அணைத்துக்கொள்வேன்.

குமுதா: (பதறி) பாண்டியன். பாண்டியன்.

வார்டர் : புறப்படம்மா ! டயம் ஆச்சு.

(குமுதா பாண்டியனை விட்டு)

குமுதா: பாண்டியன். பாண்டியன்.

பாண்டியன் : போய்வா குமுதா!