காட்சி 55] [பூமாலை வீடு

காட்சி 55·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[பூமாலை ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அங்கு வந்த பரந்தாமன்]

பரந்தாமன்: எங்கக்கா பயணம்?

பூமாலை: மதராஸுக்கு...

பரந்தாமன்: என்ன திடீர்னு மதராஸ்!

பூமாலை: ஏன்? குமுதாவைப் பார்க்கப் போறேன்.போகக் கூடாதா?

பரந்தாமன் : கூடாதென்றா சொல்கிறேன் ...ம் .... ஆமாம் பாண்டியன் மெட்றாஸில்தானே !...

பூமாலை: ஆமாம். நீ ஏன் அதெல்லாம் கேக்கிறே ! உனக்குத்தான் உற்றார் உறவினர், நல்லவர் கெட்டவர் எதுவுங் கிடையாதே.

பரந்தாமன் : ஏதோ ஆத்திரத்தில் செய்துவிட்டேனக்கா அப்படி .

பூமாலை : நல்ல ஆத்திரம், கொஞ்சம் தவறியிருந்தால் குமுதா விதவையாக ஆகியிருப்பாள்.

(உள்ளே போகிறாள். நெக்லஸை பெட்டியில் வைக்கிறான். பூமாலை வந்ததும்)

பரந்தாமன் : நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடக்கா! (பூமாலை பார்த்தல்) நான் பாண்டியனை சுட முயன்றது தவறுதான். என்னை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டாயே ...

(வேலைக்காரி வந்து )

வேலைக்காரி : நேரம் ஆச்சும்மா.

பூமாலை: (பரந்தாமனிடம்) நான் வரட்டுமா.

பரந்தாமன் : சரிக்கா ! எல்லாரையும் விசாரிச்சேன்னு சொல்லு! பாண்டியனுக்கும் குமுதாவுக்கும் என் பரிபூரண ஆசீர்வாதங்களைச் சொல்லு !

(பூமாலை போகிறாள்)