காட்சி 53] [கருடன் பதிப்பகம்
காட்சி 53·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
முரடன் : இத பாருங்க. உஷாவைப் பிடிச்சி இழுக்கும்போது இந்த நெக்லஸ்கூட அறுந்து கையோட வந்துட்டுது.
(பரந்தாமன் நெக்லஸை வாங்கிப் பார்த்தல்)
கருடன் : ஆஹா! அருமையான வைரம். ரொம்ப விலையிருக்கும். ம் ... கொடு கொடு. அதாவது மிச்சப்படட்டும். பெட்டியிலே வைப்போம்.
(பரந்தாமன் நெக்லஸைக் கொடுக்கவில்லை)
பையன்: கனல் கக்கப் பேசுவது. காரசாரமாக எழுதுவது ! கட்டுப்பாடில்லாமல் கட்சி நடத்துவது.கண்மூடித்தனமாக தொழிலாளரைத் தூண்டுவது. இதெல்லாம் போலித் தலைவர் விடும் புஸ் வாணங்கள்.
(என்று "போலித் தலைவன்" என்ற பாண்டியனின் புத்தகத்தை படித்தபடி வருகிறான். பரந்தாமன் ஆத்திரம் அதிகமாகிறது.)