காட்சி 46 ]

காட்சி 46·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[கருடன் பதிப்பகம்

பரந்தாமன்: (கருடனிடம்) கூட்டத்தில் அவ்வளவு பேசினான். கேட்டுக்கொண்டு வந்தாய்...ம்...

கருடன் : நான் என்னப்பா செய்றது. தனி மனுஷன்.

பரந்தாமன் : படாடோபம்,பத்திரிகை விளம்பரம், பரந்தாமனுக்கு ஜே...நேரிடையாகவே தாக்கியிருக்கிறான்.

கருடன்: தாக்கினாலும் பரவாயில்லை. அந்த ஐயாயிரம் விஷயத்தையும் சொல்லிவிட்டான்

பரந்தாமன்: பாண்டியன்! என் வீட்டுக்குள்ளேயே எதிரி! உயிரோடு உலவக்கூடாது அவன்.

கருடன்: பிணமா உலவினால்கூட உன்பெருமைக்கு ஆபத்துதான்.

பரந்தாமன்: முடிவு கட்டுகிறேன். இன்றைக்கே முடிவு கட்டுகிறேன்.