காட்சி 16] [கருடன் பதிப்பகம்—பகல்
காட்சி 16·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[கருடன் திருமணப் பத்திரிகை படிக்கிறான்]
கருடன் : சிங்க நல்லூர் சிவசக்தி மில்ஸ் மேஸ்திரி புண்யகோடியின் மகன் எழுத்தாளர் பாண்டியனுக்கும், கோவை மெர்ச்சண்ட் குணரத்னம் திருச் செல்வி பாமாவுக்கும் திருமண விழா மணமகள் இல்லத்தில் சிறப்பாக நடைபெறும். தங்கள் சுற்றமும்.....
(பரந்தாமான் பத்திரிகையை வேகமாகப் பிடுங்கி கசக்கி எறிதல் )
கருடன் : அந்தப் பயல் பாண்டியன் நம்ப விஷயத்திலே குறுக்கிட்டு கொண்டேயிருக்கிறான். அன்னைக்கு என்னடான்னா நாடகம் நடத்தி நம்ம கொள்கையை கிண்டல் பண்றான். இன்னைக்கு என்னடான்னா நம்ப கல்யாணம் பண்ணிக்க வேண்டிய பெண்ணை ..
பரந்தாமன்: ஏய் ...
கருடன் : இல்லை. நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டிய பெண்ணை ...
பரந்தாமன் : யார் விட்டார்கள்.