பாசக் கிளிகள்
கருத்த மச்சான் ஒனக்குத்தான்
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
பெண்
கருத்த மச்சான் ஒனக்குத்தான் ஆ...
வறுத்த மீன வச்சிருக்கேன் ம்ம்... ம்...
வாய்த்திறந்து வாங்கிக்க - நான்
பாய விரிச்ச படுத்துப்பேன் ம்... ம்...
நீ பாஞ்சு வந்து கட்டிக்கோ
ஒஞ்சு போயி நிக்காத ஓடிவந்து சாஞ்சுக்கோ
(ஏ கருத்த மச்சான்)
ஆண்
ஏ பச்சரிசி சிரிப்பே
என்ன பத்திக்கொண்ட நெருப்பே
நான் ஆண்டி என்ன தூண்டிப்போட்டு இழுக்காதே
பெண்
ஏ... ஆண்டிக்குத்தான் தேவ ஆறுகால பூஜ
நானுமுத்த போற மெழுக பாக்காதே
ஆண்
அடங்காத பொம்பளையே அழகான பூதகியே
பெண்
ஏ... அடுப்பதும் பொண்ணுன்னு
அலட்சியமா கேலிபண்ணும்
ஆம்பளைங்க திருந்தவேணும்
அடிமைத்தனம் போகவேணும்
தாலியத்தான் கட்டிப்புட்டு
தவசிவேஷம் போட்டுக்கிட்ட
(கருத்த)
ஆண்
ஏ... வறுத்த மீன தின்னா
சாமிகுத்தம் வந்து சேரும்
நான் சைவம் பெண்ணே
அசைவம் போட்டு கெடுக்காதே
பெண்
ஆணு பொண்ணு உறவே
அசைவம்தானே மாமா
அருகில் வரும் மீன வெறுக்காதே
ஆண்
அடங்காத பொம்பளையே
அழகான பூதகியே
பெண்
எட்டுக்கால் லட்சணமே
எமனேறும் வாகனமே
என்றுதான் நானும் மச்சான்
ஏளனமே செய்வோனய்யா
எந்நிலமை புரியலையா
உன்மனசும் எங்களையா
(கருத்த)