பாசக் கிளிகள்

தென்றல் என்னும் தேர் ஏறி

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

ஆண்

ஆ... தென்றல் என்னும் தேர் ஏறி - தமிழ்

மன்றம் வந்த முல்லை மலரே

தென்றல் என்னும் தேர் ஏறி - தமிழ்

மன்றம் வந்த முல்லை மலரே

உனைப்போல் இல்லையோர் அழகே

உதிக்கும் ஞாயிறெனெ உருமாறி

உலகை எழுப்ப ஒளியாய் வா! வா!

(தென்றல்)

நானறிவேன் இசை ஞானம் யாவும்

நாசிகா பூசனி நான் பாடும் ராகம்

நானறிவேன் இசை ஞானம் யாவும்

நாசிகா பூசனி நான் பாடும் ராகம்

பாவமுடன் ஜதி சொல்லி பாடும்

தகுதியும் அதனுடன் கூடும்

நானும் தெரிந்தவன் நான்தானே

பல நூலின் ஆழம் அறிவேனே

(தென்றல்)

ஜதி சொல்லல்

தகத் தோம்தில்லானா

தகத் தோம்தில்லானா (ஜதி சொல்லல்)

தோம்... தோம்...

தண்ணிலவாய் குளிரும் உன்முகம்

தனலாய் கொதிக்கும் உன் அகம்

மாமதுரை தமிழ்ச்சங்கப் பாட்டு

தேன்மதுர இதழ்கள் பாடக் கேட்டு

செவியில் தேன்பாய வீணை மீட்டு

உலகிலே யார் காட்டு