பாசக் கிளிகள்
தங்கை என்ற பாசக்கிளி கொஞ்சி விளையாட
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
ஆண்
தங்கை என்ற பாசக்கிளி கொஞ்சி விளையாட...
பொங்கும் எங்கள் நெஞ்சங்களில் புன்னகைப் பூத்தாட...
அண்ணன்மார்கள் சுற்றிநின்று ஆனந்தப் பண்பாட
குமரிப்பெண்ணின் கூந்தலுக்கு குறிஞ்சிப்பூக்கள் ஓட
நிலவும்தான் இவள் முன்னால் நின்றாடுமா
நிலமயில் இவள்போல அழகாகுமா
நிலவும்தான் இவள் முன்னால் நின்றாடுமா
நிலமயில் இவள்போல அழகாகுமா
ஆ... ஆ... லூ... லூ...
ஆண் / குழு
ஆண் : தங்கை என்ற பாசக்கிளி கொஞ்சி விளையாட
குழு : ஆட
ஆண் : பொங்கும் எங்கள் நெஞ்சங்களில் புன்னகைப் பூத்தாட...
குழு : ஆட
ஆண் : அண்ணன்மார்கள் சுற்றிநின்று ஆனந்தப் பண்பாட
குழு : ஆட...!
ஆண் : குமரிப்பெண்ணின் கூந்தலுக்கு குறிஞ்சிப்பூக்கள் ஓட
குழு : ஆட...!
ஆண் / மனோரமா / பெண்
ஆண் : பிறந்தாய் ஒரு பிள்ளைக்கனி அமுதாய் பிறந்தாய்
ஒரு வெள்ளிப் பிறைபோல வளர்ந்தாய்
துள்ளிடும் இளமானாய் திகழ்ந்தாய்
எங்கள் வீட்டில் விளக்காக ஒளிவீசப் பிறந்தாய்
மனோரமா: கண்ணகிதான் இங்கு வந்து தங்கையானால் பாரு
பெண்ணழகி பிறந்தநாளில் நல்வாழ்த்துக் கூறு
பெண் : இருவருமே என்வாழ்வில் இமையானீரே
ஆண் : சிறந்தாய் ஒரு செம்மொழித் தமிழாய் சிறந்தாய்
செழுஞ்சுடர்கதிர்போல உயர்ந்தாய்
சிவப்பு மல்லிகைப்பூவாய் மலர்ந்தாய்
சிறந்தாய் ஒரு செம்மொழித் தமிழாய் சிறந்தாய்
செழுஞ்சுடர்கதிர்போல உயர்ந்தாய்
ஆண் / மனோரமா / பெண்
சிவப்பு மல்லிகைப்பூவாய் மலர்ந்தாய்
எங்கள் வீட்டில் தங்கையாகப் பிறந்து
எங்கள் வீட்டில் தாயாய் திகழ்வாய்
எங்கள் வீட்டில் தங்கையாகப் பிறந்து
எங்கள் வீட்டில் தாயாய் திகழ்வாய்
மனோரமா: உன்னை ஒரு நல்ல வீட்டு மருமகளாய் காண
அன்னைமனம்போல் இந்த அண்ணன்மனம் ஏங்க
பெண் : அம்மா என் கண்கள் குளமாகுதே...