தூக்கு மேடை

குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

பெண்

ஆ-ஆ...ஆஆ...லாலலாலா...

குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது

குலவிட வருவாய் குளிர் தென்றலே

தென்றலின் சுகத்தில் தேனிடை கலந்து

தளிராய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து

ஆண்

கற்கண்டு தோட்டத்தில் பால் பாய்ந்து

கரும்பு கலப்பையாய் ஏரோட்டி

அற்புதமாய் விளைந்த கதிர்மணியே

அற்புதமாய் விளைந்த கதிர்மணியே

அணைத்து மகிழ்வோம் கண்மணியே!

(குறிஞ்சி)

ஆண்

இன்ப நாவுக்கு முன்னுரை எழுதிட வருக

இயல் இசை கூத்தென முத்தமிழ் சுவையை தருக

முத்தமிழ் கயல்விழி முக்கனி உன் மொழி

முத்திக்கு ஒரு வழி நீ

முத்துமாரி பொழி நீ

பெண்

அணைத்தால் விளக்கும் இரண்டு விடும்

அஞ்சும் தேகம் துவண்டு விடும்

இணைத்தால் நம்மை தமிழன்னை

இனி பிரிவதில்லை என்றும் நானுன்னை

(குறிஞ்சி)