தூக்கு மேடை

ஆயிரம் பிறைகள் காணும் வரை

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

ஆயிரம் பிறைகள் காணும் வரை

அலைகடல் ஓசை அடங்கும் வரை

தமிழே உனக்காக நீ தனியே எனக்காக

காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்.....

கதிரவன் ஊர்வலம் நிற்கும் வரை

கனி வளம் உலகில் வற்றும் வரை

பொதிகைத் தென்றல் தூங்கும் வரை

பொன்னி நதியான் செழிக்கும் வரை

தமிழே உனக்காக - நீ

தனியே எனக்காக..

(ஆயிரம்)

இயற்கை வளங்கள் நிலைக்கும் வரை

இலக்கிய செல்வம் வாழும் வரை

இளமை அழகு தீரும் வரை

முதுமை உடலில் பாயும் வரை

தமிழே உனக்காக - நீ

தனியே எனக்காக

(ஆயிரம்)