தூக்கு மேடை

குடி உயர கோல் உயரும்

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

பல்லவி

ஆண் : குடி உயர கோல் உயரும்

கோல் உயர குடி உயரும்

உயரம் எத்தனை அழகாய் எத்தனை விதமாய்

எங்கள் மக்கள் சாகிறார்

எரியும் நெருப்பில் வேகிறார்

சரணம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்றார் பாட்டுல

எங்கள் மன்னர் வாழுகின்றார் மண்ணாங்கட்டி வீட்டுல

இடி இடித்தால் மழை பொழிந்தால்

மன்னரெல்லாம் ரோட்டுல

சிறுகொடிந்த பறவை கூட இருக்குதுப்பா கூட்டில

(குடி உயர)

எங்களுக்கும் உணர்ச்சி உண்டு

எங்கள் பங்களாவில் மெத்தை உண்டு

புளிச்சக்காடி மதுவை உண்டு

புருஷன் மனைவி சேருவதுண்டு

வெளிச்சம் போட்டா காரும் வந்தா

விலகி விலகி படுப்பதுண்டு ....

(குடி உயர)

முத்தெல்லாம் முக்குச் சளி

ரத்தக் காயம் ரத்தினமாம்

வைரங்கள் நட்சத்திரம்

வானவில்லே வைடூரியம்.. எப்படி....

குத்துக் கல்லு சிம்மாசனம்

குப்பத் தொட்டி ராஜாங்கம்

செத்துப் பிழைக்கும் மக்களுக்கு

ஜெகத்தை அழிக்கும் சக்தி உண்டு

(குடி உயர)