ரங்கோன் ராதா
வான் மலர் சோலையில்
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
வான் மலர் சோலையில்
தேன் மதி காணவே
மாருதில் ஓடுதே
காற்றில் ஆடும் முல்லைக் கொடியே
துணைதான் இணைந்த நம் வாழ்வில்
ஆனந்தம் காண்போமே இன்றே
ஆசைத்துரையே அழகான ராணி
அணைமீறும் அன்பால் அலைமோதுகின்றாள்
அருகே நீ வாராய்
தீயும் அணைந்து தென்றல் வீசுது
தெவிட்டாத அமுதாய் தேமாங்கனியாய்
புதுவாழ்வு கண்டேன்.