ராஜா ராணி
வேலை யில்லாத தொல்லை
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
வேலை யில்லாத தொல்லை
காலை பனி போலே நீங்கி போனதே...
நான் எண்ணாத நல் வாழ்வுதான்
தன்னால் வந்து சேர்ந்ததே
இன்ப நன்னாளிதே
செல்வ பொன்னாளிதே...
ஆஹா ஆனந்தம் ஆனந்தமே...
முன்பின் அறியாதார் உறவாளர் எனமனம்போலவே
நலமே நானடைந்தேன்
அன்பின் உருவாகவே
எந்தன் துயர் நீங்கவே
நன்மை தந்திட வந்தார் இன்றே
என்னை சீமாட்டி என்றெண்ணி ஏமாந்தாரே
ஆஹா விந்தையிதே...