ராஜா ராணி
வாங்க... வாங்க... வாங்க...
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
ராணி
வாங்க... வாங்க... வாங்க...
எல்லோரும் இங்கே வாங்க
டிக்கெட்டு வாங்க... வாங்க...
இன்றிரவு மிக நன்றிரவு
இணையில்லாத இன்ப இரவு...
நபர் 1
தரை ஒண்ணு!
ராணி
அரை ரூபா!
அவன்
கொடு கொடு இந்தா!
ராணி
தரை அரை ரூபா!-கரை படிந்த தரை அரை ரூபா
ரத்த கறை படிந்த தரை அரை ரூபா
வெற்றிலை பாக்கு கறை படிந்த தரை அரை ரூபா
(இன்றிரவு)
(இன்றிரவு)
நபர் 2
ஏம்மா இன்னிக்கு என்னா ட்ராமா?
பெண்
அட வெங்கட்ராமா கம்பெனிலே நில்லு!
அவன்
எப்படித் தெரியும் என் பேரு?
செப்படி வித்தை கற்றவளோ?
ராணி
தரை அரை ரூபா... பெஞ்சு ஒண்ணு
பேக் பெஞ்சு மூணு!..
ஏ... காலி...
காலி! காலி!...
நாற்காலி... அஞ்சு ரூபா...
நபர் 3
கொஞ்ச ரூபா சொல்லு
ராணி
ஆ!...
அவன்
கொஞ்ச ரூபா சொல்லம்மா... கோகில வாணி
அம்மா கோகில வாணி
அம்மா கோகில வாணி
ராணி
வஞ்சகனே போடா... ஏடா... மூடா...
வீணே சாகாதேடா...
அவன்
ஆ!
ராணி
எங்க நாடகத்தில் இந்த வசனங்களை கேட்ட
கொஞ்ச ரூபாயா? அஞ்சு ரூபா தான்
அழகான நாடகம் எழிலான காட்சிகள்
அனல் வீசும் பேச்சுகள் -
ஆடல்... பாடல் ஊடல்... கூடல் எல்லாம் காண
இங்கே வாங்க... வாங்க
டிக்கெட்டு வாங்க வாங்க
ராணி
மூணு வயதுக்கு மேல் முழு சார்ஜ்
இடம்மாறி உட்கார்ந்தால் டபுள் சார்ஜ்
ட்ரெஸிங் சீனில் அடிக்கக் கூடாது டார்ச்சு
(மூணு)
கிழவன்
ஐம்பது மூணுக்கு?
ராணி
ஈஸிசேர்!...
ஒரு பெண்
ஏம்மா! பெண்களுக்குத் தனி இடம் உண்டா?
ரா
பிள்ளைகள் போட்ட எனையும் உண்டு!
பீடா சிகரெட் பாக்கு வெத்திலை
சோடா கலர் ஆரஞ்சு!
குள்ளன்
பீரியா?
ராணி
அட பீரியோ!
பீரியோ டேபிள்னா டேபிள்னா!
முட்டன்னா டாவன்னா உள்ளன்னா போய்யா
(மூணு)
நபர் 4
ஏம்மா அரை டிக்கட் உண்டா?
ராணி
யப்பா... உமக்கு முழு டிக்கட்டும் இல்லே!
அவன்
ஏனாம்?
ராணி
ஹவுஸ் புல்!