அம்மையப்பன்
சின்னப் புது மலரே
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
முத்தாயி
சின்னப் புது மலரே
சிங்கார அகல் விளக்கே...
கன்னற் தனிச்சுவையே
கற்கண்டே கனிரசமே...
(சின்)
(சின்)
செந்நெல் மணிக் கதிரே
தித்திக்கும் செங்கரும்பே...
செந்தமிழ் மலர் என்றெடுத்த
செல்வக் களஞ்சியமே...
(சின்)
(சின்)
காவிரியின் தென் பாங்கே
கற்றார்ப் பெட்டகமே...
பூவிரித்த சோலையிலே
பொங்கும் புதுமணமே...
(சின்)
(சின்)
நீ... இராவிடம் இருள் சூழும்
என்ற நிலை தந்த
திராவிடப் பொன்னழகி...
வாழ்ந்திடுவாய் விண்ண முதே -
(சின்)
(சின்)