அம்மையப்பன்
காதல் துறையே புதுமைக் கனவே
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
முத்தாயி
காதல் துறையே புதுமைக் கனவே - மன
மேவும் இன்ப ஜோதியே ஓடிவா
(கா)
(கா)
முத்தன்
வானில் உலாவும் மாமுகில் காணும்போதிலே
சோலைக் கலாபம் ஆடுதே...
(கா)
(கா)
முத்தன்
அன்பில் விளைந்த மாமணி...
முத்தாயி
ஆனந்த வாழ்வின் செல்வம் நீ
முத்தன்
கண்ணில் நின்றாடும் பாவையே
முத்தாயி
இன்பத்தின் எல்லை காணுவோம்...
முத்தன்
இதய வீணையே....
இருவரும்
ஈடில்லாத வாழ்விதே
இருவரும்
காதல் நிலவே புதுமைக் கனவே-மன
மேவும் இன்ப ஜோதியே - ஓடிவா