நாம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே
அருமை மிகுந்த எங்கள் அறிஞர்
அண்ணா வாழ்கவே
குமர அண்ணா வாழ்கவே
பெருமை பேசும் மனிதரெல்லாம்
எதற்கெடுத்தாலும் எருமை போல
தலையசைப்பதை உரிமைக்காக
எதிர்த்து நிற்கும்
அண்ணா வாழ்கவே
எங்கள் அண்ணா வாழ்கவே
புழுவாகத் துடிக்கின்ற ஏழை
கழுகாகப் பறக்கின்ற சீமான் - இந்தப்
பொல்லாத பேதங்கள் எல்லாம்
இல்லாத பொன்னாடாய்ச் செய்தார் - அந்த
அண்ணா வாழ்கவே
குமர அண்ணா வாழ்கவே
எலியாக வாழ்கின்ற விதவை
பலியாக தருகின்ற இளமை
புலியாக பாய்கின்ற பழமை
மலிவாகப் போன இக்கொடுமை
மாற்றிடும் அண்ணா வாழ்கவே!
குமர அண்ணா வாழ்கவே.
சிலசில இடங்களில் பணத்தோட்டம் - அது
செல்வக் குமரி... கோட்டம்! இப்படிப்
பலபல கருத்துக்கள் சொல்லும் தேனாறு
பகுத்தறிவூட்டும் லட்சிய வரலாறு -
அண்ணா வாழ்கவே
குமர அண்ணா வாழ்கவே.