நாம்

புதியதோர் பாதை வகுப்போம்

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

குமரன் & கிராமவாசிகள்

புதியதோர் பாதை வகுப்போம் - நாம் - கெட்ட

போரிடும் பாதையை சாய்ப்போம் நாம்...

நித்தம் உழைத்தே உயர்வோம் நாம் -

நெறி தவறாமல் வாழ்வோம் நாம் -

அஞ்ஞானப் பாழ் வெளியையே - நல்

அறிவாகும் ஏர் முனையினால்...

அஞ்ஞானப் பாழ் வெளியையே - நல்

அறிவாகும் ஏர் முனையினால்...

அறிவாகும் ஏர் முனையினால்...

விஞ்ஞானப் பேரறிவினால் - உழுதே

மெய்ஞ்ஞானம் காண்பவர்கள் நாம்!

விஞ்ஞானப் பேரறிவினால் - உழுதே

மெய்ஞ்ஞானம் காண்பவர்கள் நாம்!

ஏற்றங்கொண்டு வாழ்வோம் நாம் - கால

மாற்றத்தோடு மாறுவோம் நாம்

மாற்றத்தோடு மாறுவோம் நாம்

ஊற்றெடுக்கும் அறிவினாலே - புதிய

கருவிகொண்டு ஆளுவோம் - நாம்

ஊற்றெடுக்கும் அறிவினாலே - புதிய

கருவிகொண்டு ஆளுவோம் - நாம்!

நாத்து நடுவோம் - களை

பேத்து எறிவோம்!

நாத்து நடுவோம் - களை

பேத்து எறிவோம்!

காத்து வளர்ப்போம் - கதிர்

கண்டு மகிழ்வோம் - கதிர்

கண்டு மகிழ்வோம்...

(தொகையறா)

சொப்பனத்தில் வந்த கடவுளின் அருளால்

பயிர் வளர்த்தாராம் நந்தனார்...

எப்பொழுதும்போல் கைகால்களுதவியால்

பயிர் வளர்த்தோமே இந்நாள்...

வளைந்த கதிரில் விளைந்து வந்தாய் தங்கராணியே...

வாழ்வில் இன்பம் பொங்கிட வந்தாய் எங்கள் தோழியே...

“பொதுக் களஞ்சியம் கண்டோம் நாம்

புதியதோர் பாதை வகுத்தோம்” ...