நாம்
மணமில்லா மலர் நானம்மா!
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
மீனா
மணமில்லா மலர் நானம்மா!
மாதர் உலகில் வாழ்வே அறியா
மணமில்லா மலர் நானம்மா!
ஒடிந்தது வீணை நாதமே இனியேது
இடியிதோ வீழ்ந்ததே பூங்கா அழிந்ததே
மணமில்லா மலர் நானம்மா!
வாழ்விலே விஷமே வீசியே மறைந்ததால்
மணமில்லா மலர் நானம்மா!
வாடிடும் கொடியானேன்
சூறாவளிக் காற்றாலே
மகரந்த இதழ்மீது மாசு தோய்ந்து மூடிய
மணமில்லா மலர் நானம்மா!
இன்பச் சுடர் காணேனே
இருள் வீட்டில் தனியானேன்
துன்பப் புயல் அலை மோதி
சோக வாழ்வுச் சோலையில்
மணமில்லா மலர் நானம்மா!