திரைபோட்டு நாமே மறைத்தாலும் காதலை
பாட்டு 11·11-இல்
கிடைக்கும் மூலச் சான்றின்படி இப்பாடலுக்குத் தனி நிலைப் பாடலாசிரியர் நிறுவப்படவில்லை.
ராஜா
திரைபோட்டு நாமே மறைத்தாலும் காதலை தெளிவாக நாளை தெரியாமல் போகுமோ?
ராணி
சரியான நேரம் கிடைக்காத போதிலே திரைபோட்டுக் காப்பதே முறையாகும் வாழ்விலே
ராஜா
சரியான நேரம் என்னேரமோ!
ராணி
அலை மோதும் நெஞ்சம் நிலைகாணும் நேரமே!
ராஜா
சந்தோஷம் காணவே தடை போடலாமோ?
ராணி
தவறாக என்னை எடை போடலாமோ?
ராஜா
அரும்பான காதல் மலராகுமோ?
ராணி
குறும்பான கேள்வி இது நியாயமாகுமோ?
ராஜா
கரும்பாக பேசும்!
ராணி
என்னாசை ராஜா!
ராஜா
உறவாகி இன்பம் காண்போம் ராணி...
ராஜா
ராணி;........(சரியான)