ஆழிசூழ் உலகம் விடிந்த தென்று—என்

பாட்டு 6·11-இல்

பிற்கால தொகுப்புச் சான்றின்படி இப்பாடல் கலைஞருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இது மூல நூலின் தனி நிலைப் பாடலாசிரியப் பொறுப்பன்று.

விருத்தம்

ஆழிசூழ் உலகம் விடிந்த தென்று—என் ஆருயிர் மணவாளரை எழுப்பிவிட்டு கோழிபோல் கொக்கரித்து என் கற்பையும் கொத்திவிட்டாய் கொடியவனே! படுபாவி ஊழிபோல் வந்திங்கு ஆடிவிட்டாய் உடைந்த தாழிபோல் ஆகிவிட்டேன்—இனி ஒரு கணம் இந்த உயிர் நில்லுமோ கற்புக்கு இலக்கணம் சொல்லுமோ சொல்லுமோ... எந்தன் உயிர் நில்லுமோ