களஞ்சியப் பகுதி 49
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
—★— ★ ராணி வீடு ★ [ராணி விஷம்குடிக்க முடிவு செய்து சமரசத்துக்கு கடிதம் எழுதுகிறாள்.] விதவை என்ற சொல்லைவிட விஷம் என்ற சொல் சுவையாக இருக்கிறது!...இந்த வையகத்தில் வாழ முடியாத நிலைபெற்ற பெண்ணொருத்தி, இதுபோன்ற முடிவைத் தேர்ந்தெடுத்ததைத் தாங்கள் குற்றமெனக் கருதமாட்டீர்கள் என்று நம்புகிறேன்! விடை பெற்றுக்கொள்கிறேன்... அன்புள்ள, ராணி. [அப்போது கரண்ட் வருகிறான்.] கர: அம்மா! என்னம்மா இது நாடகத்துக்கு வராம... ராணி: கரண்ட்! நல்லசமயத்தில் வந்தாய்...இந்தா...இந்த கடிதங்களைக் கொண்டுபோய் ராஜாவிடமும், சமரசத்திடமும் கொடுத்துவிடு! கர: [வாங்கிக்கொண்டு] நீங்க நாடகத்துக்கு வர்லியா? வாங்கம்மா, அருமையா இருக்கு நாடகம்!