களஞ்சியப் பகுதி 47

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

—★— ராணி வீடு (ராசா கதவைத் தட்டுகிறான்) ராசா: ராணி!...ராணி! ராணி...! ஞான: (கதவைத் திறந்து) யாரு?... ராசா: ராணி இல்லே?... ஞான: ராணி இல்லை, நீங்க யாரு? ராசா: நான்தான் ராசா. ஞான: ராசாவா? அடப்பாவி. என் குடும்பத்தைக் கெடுத்த துரோகி. என் மகளோட மனதைக் கலைச்சி அவளை பாபாத்மாவாகச் செய்துவிட்டாயே. பாதகா. துரோகி. ராசா: பெரியவரே, ஆத்திரப்படாதீங்க—என்னுடைய குற்றம் எதுவுமில்லை. ஞான: ஆமாம். குற்றமெல்லாம் என்னுடையதுதான் ஒரு ஏழைக்கு உதவி செய்வதுபோல நடித்து, அப்பாவிப் பெண்ணை ஏமாற்றி, சாஸ்திரோத்தமான சம்பிரதாயத்தையே அழித்துவிட்டாயே, சண்டாளா. கொலைகாரப் பாதகா, ராசா: பெரியவரே! கொஞ்சம் பொறுமையோடு பேசுங்கள். உண்மையைத் தெரிந்துகொள்ளத்தான் நான் இங்கு வந்தேன்! ஞான: உண்மை! என்ன உண்மை? ராணி விதவை! அவள் உனக்கு கிட்டாத பொருள்! இதுதான், நீ தெரிஞ்சுக்க வேண்டிய உண்மை! போய்விடு! என் முன்னால் நிற்காதே! போய்விடு...போ!