களஞ்சியப் பகுதி 39
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
—★— சாந்தம்: உம்...தம்பீ! இந்த தாசி அன்னமா வேஷம் போட்டாளே, அவ யாரு? ராஜா: அதைப்பத்தி சந்தேகப்பட்டுத்தான் நான் ஒங்ககிட்ட கேட்டுப் போகலாம்னு வந்தேன்! சாந்: உங்களுக்கும் சந்தேகம்தானா? அதுதான் எல்லோருக்கும் தெரிஞ்சுபோச்சே! ராஜா: உம்...நம்ப சமரசம் அவர்களுக்கும், அந்தப் பெண்ணுக்கும் ஏதாவது உண்டுங்களா? சாந்: உண்டு...உண்டு...உண்டு...அதையேன் இப்படி பயந்துகிட்டு ஒளிவு மறைவா கேக்குறீங்க? ராஜா: இல்லை...மொதல்ல அந்தப் பெண்ணுக்கும் உங்க வீட்டுக்கும் ஒரு தொடர்பும் இருக்காதுன்னு நெனைச்சேன். இப்ப பார்க்கும்போது, அந்தப் பெண்ணும் நம்ப சமரசம் அவர்களும் அந்தப் பெண்ணு வீட்டுக்குள்ளே சேர்ந்தாப்பிலே போனதை நான் பார்த்தேன்! சாந்: போனாங்களா? ராஜா: ஆமாம். சாந்: சேந்தாப்பிலே போனாங்களா? ராஜா: ஆமா, பாத்துட்டுதான் வர்ரேன். சாந்: உங்க கண்ணாலே பாத்தீங்களா தம்பீ? ராசா: ஆமாம்மா. சாந்: தம்பீ, சொல்ரேன்னு நீங்க வருத்தப்பட்டுக்காதீங்க. ஊருக்கெல்லாம் உபதேசம் பண்றாரு. இவரு இப்படி எல்லாம் நடக்கலாமா? இவரை நான் எவ்வளவோ நம்பியிருந்தேன் தம்பீ, நீங்கதான் என்கூட பொறந்த பொறப்பு மாதிரி...உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன? அவரை எப்படியாவது திருத்திடுங்க. ராஜா: நீங்க என்ன சொல்றீங்க? சாந்: அதுதான் தம்பி. இந்த நாடகக்காரியோடெ சேர்ந்துகிட்டு இந்த வயசிலே இப்படியெல்லாம் சுத்துவாங்களா? ராஜா: அய்யய்யோ. நீங்க அப்படி சந்தேகப்பட்டுட்டீங்களா? அதெல்லாம் ஒண்ணும் நெனைக்காதீங்கம்மா. சாந்: நான் தான் கண்ணுலே பார்க்கிறேனே தம்பீ! அவ தினம் தினம் தோட்டத்துக்கு வந்துபோறாளே... ராஜா: கண்ணால் கண்டதும் பொய்—காதால் கேட்டதும் பொய்—தீர விசாரிப்பதே மெய்யம்மா. (சமரசம் வருகிறார்.) சம: ஒன்ஸ்மோர்.... ராஜா: சார்...வணக்கம் சார்.... சம: வணக்கம் ஒன்சுமோர்.... ராஜா: என்னா சார் ஒங்களுக்குத் தெரியாத சார்? சம: எனக்குத் தெரியும்; இன்னொருத்தருக்கு தெரிய வேண்டி இருக்கு. ராஜா: ஆ...வேணாம் சார்... சம: சொல்லுன்னு? ராஜா: ஆ...சரி சார்...கண்ணால் கண்டதும் பொய்—காதால் கேட்டதும் பொய்—தீர விசாரிப்பதே மெய். சார்... சாந்: சபாஷ்...சபாஷ்.... ராஜா: சபாஷ்...சபாஷ்.... சாந்: கண்ணால் கண்டதெல்லாம் மெய்தான். ஒண்ணும் பொய்யில்லே. நீங்க வாங்க, நாம பேசுவோம். ராஜா: அம்மா...நான் வர்ரேம்மா....அப்ப சார் நான் வர்ரேன் சார்... (சாந்தம்மாள் அறையினுள் போகிறாள். சமையல்காரன் வருகிறான்.) சம: ஏய், எங்க பொறப்பட்டே? சமை: வேலையெல்லாம் முடிஞ்சிபோச்சிங்க...சும்மா இப்படி வெளியேபோயி படுக்கலாம்னு பொறப்பட்டேனுங்க. சம: முருகா.... சமை: அய்யா. சம: வந்து, அன்னைக்கு அந்த சேலை அவன் வாங்கி கொடுத்தான்னு சொன்னியே... சமை: ஆமாங்க...அவனே தான் வாங்கி கொடுத்தான், இதில் என்னாங்க சந்தேகம்? அவன்தான் வாங்கி கொடுத்தான். சம: என்னடா இது, முன்னுக்கு பின் முரணாயிகிட்டே போவது?... சமை: என்னாங்க...நீங்க மொரனுன்று சொல்றீங்க! இந்த பயல்தான்...நம்ப சங்கரன் பயதான் வாங்கிக் கொடுத்தானுங்க...நான் என் கண்ணால பாத்தேனே! சம: சங்கரன் பய வாங்கி யாருக்கு கொடுத்தான்? சமை: அவளுக்கு கொடுத்துட்டான்! சம: எவளுக்கு...? சமை: நம்ப வேலைக்காரிக்கு! சம: நாசமாபோச்சு! அந்த சேலை சங்கதியைபத்தித்தானா நீ சொன்னே? சமை: பின்ன, நீங்க வேறெ எதைப்பத்தி சொல்றீங்க...நீங்க? சம: ஒண்ணுமில்லேப்பா! நீ போய் படுத்து தூங்குபோ அப்பா! சந்தேகம் ஒரு பெரிய வியாதிதான்!