களஞ்சியப் பகுதி 33
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
—★— ராஜா: லீலா...லீலா...என்ன லீலா, பயந்துட்டியா? ராணி: இதெல்லாம்எனக்கு ஒண்ணும்பிடிக்கவே இல்லை! ராஜா: ஏது? ராணி: நாடகம்! நாடகம் நடத்துனீங்களே அது! ராஜா: ஓகோ! கலாட்டா வந்துடுச்சேன்னு கவலைப்படுறியா? இதெல்லாம் சகஜம் லீலா! ராணி: உங்களுக்கு சகஜமா இருக்கலாம்: எனக்கு சங்கடமாயிருக்கு! கலாட்டாவுல ஒரு கல்லோ, கம்போ தலையில்பட்டிருந்தா என்னா ஆகிறது? ராஜா: என்ன ஆயிருக்கும்? கொஞ்சம் ரத்தம் வந்திருக்கும்! அவ்வளவுதான் லீலா! இந்த ஒடம்பு எவ்வளவு தியாகத் தழும்புகளை ஏத்துகிட்டு இருக்கு தெரியுமா? இப்ப நம்ம நாடகத்திலே கலாட்டா நடக்குதேன்னு பாக்கிறியா? நான் இதுக்கெல்லாம் ஒண்ணும் பயப்படமாட்டேன்; இதெல்லாம், பல தியாகத் தழும்புகளை ஏற்றுக் கொள்ளத் தயாராகத்தான் இருக்கவேண்டும்! கல் விழும்; கம்பு போடுவான்; காட்டாறு குறுக்கிடும். இதுக்கெல்லாம் கலங்கக்கூடாது லீலா! காதல் பாதைன்னா சாமான்யமா என்ன? ராணி: என்ன? என்ன? என்ன பாதை? ராஜா: பாதை...பாதை...கால் பாதை...ரோடு ராணி: என்ன ரோடு? ராஜா: ரோடு...ஈரோடு! ஈரோடு! ராணி: என்னா ஈரோடு? ராஜா: இல்ல லீலா! நீ ஈரத்தோட இருக்கிறியேன்னு சொல்லவந்தேன்! அது குளுவுருலே நாக்கு குழரி ஈரோடுன்னு வந்துடுச்சி! பரவாயில்ல...காஞ்சீ! காஞ்சீ...! ராணி: என்ன காஞ்சீ...? ராஜா: தலை காஞ்சிடுங்கிறேன்...ஈரத்தோட இருக்கியே, லீலா, ஜுரங் கிரம் வந்துடப்போவுது...நான் ஒரு பொடவை தர்ரேன் கட்டிக்கிறியா? ராணி: எங்கே இருக்கு? ராஜா: ஒனக்கு வேணும்னா என் வயத்தை கிழிச்சில்ல எடுப்பேன்...இந்தா! (வயிற்றிலிருந்து எடுத்துத் தருகிறான்) ராணி: ஒங்களுக்கு?... ராஜா: நான் ஒண்ணுதனே எடுத்துவச்சேன்! [ராணி உடைமாற்றிக் கொள்கிறாள்] ராஜா: லீலா...உம்...வா, வா! குளிரு அடிக்குதுல்ல? ராணி: ஆமாம்! ராஜா: ஒனக்கும் குளிரு அடிக்குதுலல... ராணி: ஆ...மா...ம்! ராஜா: எனக்கும் குளிரு அடிக்குது! (அங்குள்ள ஒரு சிலையைக் கண்ட ராணி திடுக்கிட்டு) ராணி: ஆ!... ராஜா: பயப்படாதே! பயப்படாதே! ராணி: என்ன இது? ராஜா: இது...அதான், இந்த இது...அடடே இந்த இதுல்ல இது வாயில இருக்கு வரமாட்டேங்குது... ராணி: அப்ப துப்பிடுங்க... ராஜா: அது முடியாது! ஆம்...லவ்மீட்டர்! லவ்மீட்டர்! ராணி: என்னா மீட்டர்? ராசா: அதான், காதலை அளக்கும் கருவி! ராணி: என்னா கருவி? ராசா: ஆ! அதாவது மனசு களங்கம் உள்ளவங்க இதைத் தொட்டா ‘பக்கு’ன்னு கடிச்சிபுடும்! களங்கம் இல்லாதவங்க தொட்டா ஒண்ணும் பண்ணாது! ஆ!...ஒனக்கு ஒண்ணும் இல்லேன்னு நெனைக்கிறேன், களங்கம் இல்லேன்னு நெனைக்கிறேன்! நீ கையை வையி! ராணி: உம்...நான் மாட்டேன். ராஜா: அப்ப ஒனக்கு களங்கம் இருக்கு! களங்கம் இருக்கு! ராணி: எனக்கொண்ணும் களங்கம் இல்லே. (கையை வைக்கிறாள்) ராசா: அய், ஒண்ணுஞ் செய்யலே, அப்ப ஒனக்கு களங்கம் இல்லே. எனக்கு மட்டும் என்னவாம்? நானும் வைக்கிறேன். (வேண்டுமென்றே “ஆ” என்று அலறுகிறான். அவள் அவன் கையைப் பிடித்து இழுக்கிறாள்) ராசா: லீலா...லீலா...மீனைப் பாத்தியா மீனு? ராணி: எங்கே? ராசா: உன் கண்ணுல. ராணி: சரி...சரி...நிறுத்துங்க. ஒங்க போக்கு எனக்கு புரிஞ்சிடுச்சி. ராசா: அய்...என் போக்கு புரிஞ்சிடுச்சா? ஆனா உன் போக்குதான் எனக்கு இன்னும் புரியலே. கொஞ்சம் புரிஞ்சி கிட்டு வருது ஆனா?... ராணி: என்ன? ராசா: ஒண்ணுமில்லை. அன்னைக்கு, நீ அந்த சேலை ஜாக்கெட்டு பாக்கெட்டை, என் காரிலேயே மறந்துட்டு...வச்சுட்டு...போயிட்டியா? நான் எடுத்துகிட்டு...ஒன்கிட்ட கொடுக்கிறதுக்கு வந்தனா? வந்தா திடீர்னு சமரசம் வீடு... ராணி: சமரசம் வீடா? ராசா: ஆமாம் அங்குள்ள அந்த நாயிகூட என்னை துரத்து துரத்துனுன் துரத்தி...வெரட்டு வெரட்டுன்னு வெரட்டி...நான் ஓடு ஓடுன்னு ஓடி... ராணி: ஓகோ, ஓடியாடி கடைசிலே நம்ப வீட்டுக்கு பக்கத்து வீடு சமரசம் வீட்டுக்குள்ள புகுந்துட்டீங்களா? ராசா: ஆமா! அந்த பாக்கெட்டை அந்த அம்மா அறை யிலே போட்டுட்டு வந்துட்டேன்! ராணி: ஆமா ஆமா! அந்த அம்மா ஏங்கிட்ட கொடுத்தாங்க! ராசா: நான் கொடுத்ததா சொல்லி கொடுத்திருப்பாங்களே! நான் குடுத்ததா சொல்லி குடுத்திருப்பாங்க... ராணி: ஆமா, சரி! போகலாம். குளிரும் கொஞ்சம் குறைஞ்சிருப்பதாகத் தெரிகிறது! ராசா: ஆமாம். குளிரு குறையத்தான் செய்யும். ஏன்னா வார்த்தையிலே சூடேறுதுல்ல... ராணி: ம், போகலாம். ராசா: இரு லீலா...கொஞ்சம் பேசிட்டு போகலாம். ராணி: இந்தா பாருங்க. இதெல்லாம் நல்லாயில்லே. நீங்க இப்படி எல்லாம் நடந்துகிட்டா அப்புறம் நான் வேலைக்குக் கூட வரமுடியாது. ஆமாம், எங்கவிட்ல அனுப்பமாட்டாங்க... ராசா: அய்யய்யோ. வேலைக்கு வரமாட்டியா? உங்க வீட்ல அனுப்ப மாட்டாங்களா? அப்ப இன்னைக்கு இதுவரைக்கும் போதும்...போகலாம். மெள்ள, மெள்ள. பாத்து, பாத்து.