களஞ்சியப் பகுதி 7
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
(மேடையில்) பாபு: சபையோர்களே! இப்போது இந்த நாடகத்திற்கு தலைமை வகித்திருப்பவரும், சமாதானக் கமிட்டித் தலைவரும், எனது மைத்துனருமாகிய திரு சமரசம் அவர்கள் இந்த நாடகத்தைப் பற்றி இரண்டொரு வார்த்தைகள் பேசுவார்கள். [பாபு மாலை போடுகிறான்.] சம: போடு; போடு! உம்—வேற யாரையாவது போட்டு இருக்கச் சொல்லலாம் மாலை. நீயே போட்டுட்டே, பரவாயில்லை. அத்தானும், மச்சினனும்னு பேசிக்கிவாங்க, [பேப்பரை எடுக்க, அது கீழே விழுந்து விடுகிறது.] சபையோர்களே! தாய்மார்களே! ஆ! நீ வந்திருக்கிறாயா? என் பெண்ஜாதி தவிர! ஆங்: இந்த சேரன். அதாவது சேரன் செங்குட்டுவன் நாடகத்தை நீங்க பார்த்தீங்க—அதிலே இருந்து தமிழர் வீரம் எவ்வளவு முன்காலத்திலே இருந்தது என்பது உங்களுக்கு நாடகத்திலே இருந்து தெரிஞ்சி இருக்கும்—உம், அதாவது முன்னே ராஜாக்கள் சண்டை போடுவதுன்னு ரெண்டு படைகள் வரும்—அங்க கொஞ்சம் சாவான்—இங்க கொஞ்சம் சாவான்—யாருக்கோ ஒருத்தனுக்கு வெற்றிகிடைக்கும். இந்தக் காலத்துலே சண்டை, சண்டையை ஏவி உட்டுட்டு. அதாவது ஏவி விட்டவன் அவன் அவன் பாட்டுக்க ஜாலியா போயிடுவான். ஒண்ணுமில்லாத ஜனங்கமேலே இந்த இந்த குண்டு குண்டு போட்டு, எல்லாத்தையும் சாக சாக, செத்து செத்து விடுவான் ஆ! ஒண்ணும் தெரியாத ஜனங்க செத்துவிடுவார்கள். ஆ. ஆ. வணக்கம். [சாந்தம் மேலே வருகிறாள்.] சம: என்ன? சாந்: ஒண்ணுமில்லீங்க. அந்த சேரன் செங்குட்டுவன் போட்டாரே வேஷம்—அவரைக் கொஞ்சம் பாக்கணும். (நாடக வசூல் கொள்ளையடிக்க சில ரெளடிகள் திட்டமிட்டு டீயில் தூக்க மருந்தை கலந்து) ரெள 2: இந்தம்மா, பாபுசார் இந்த டீயை கொடுத்துட்டு வரச் சொன்னார்! ராணி: தேங்க்ஸ். வச்சிட்டு போங்க, [ராணி டீயை குடிக்கிறாள்.] —:★:— சமரசம்: இதுதான் மிஸ்டர் ராஜா! சாந்தம்: வணக்கம். சம: இது என் மனைவி சாந்தம். ராஜா: வணக்கம். சாந்: உங்க நடிப்பு ரொம்பப் பிரமாதம். தமிழ் நாட்டு சரித்திரத்துக்கே புது உயிர் கொடுத்துட்டீங்க. நான் இவ்வளவு எதிர்பார்க்கவே இல்லை. ராஜா: ரொம்ப தேங்க்ஸ். சாந்: எங்க பாபுவைக் காணோம்? ராஜா: அவன் கலைக்ஷன்ஸ் பாக்கறதுக்கு புக்கிங்க்கு போயிருப்பான். சாந்: என்னாங்க--தம்பிக்கு ஒரு பரிசு கொடுக்கலாம்னு-- சம: கொடுத்தா போச்சு... [என்று தன் அங்கவஸ்திரத்தை எடுக்க, சாந்தம் மோதிரத்தைக் காட்டுகிறாள்.] உம்...உம்...கொடுத்துடு. சாந்: தம்பி! இதை நீங்க தயவு செய்து வச்சிக்கணும். உம், நேரமிருந்தா வீட்டுப் பக்கம் வரணும். ராஜா: எனக்கு வீடு தெரியாதுங்களே! சாந்: தம்பியைக் கேட்டா சொல்லுவானே! ராஜா: சரி, நான் விசாரிச்சுகிட்டு வர்ரேன். சாந்: அப்ப போவலாங்களா? சம: சரி! கீதாவின் தாய் தாயம்மாள்; நம்பளைப்பத்தி ஒண்ணும் சொல்லாமலே போறீங்களே! சம: உங்களைப் பத்தியா? தா: உம்! டாட்டர்! சம: ஓகோ! டாக்டரா? அவரு ரொம்ப நல்லமனுஷன்--யாரு நம்ப? தா: என் கொழந்தையைப்பத்தி கேட்டேன். சம: ஓ! டாட்டரா!--இதுவா? ரொம்ப நல்லா அழகா இருக்கு. நல்ல புள்ளே--படிச்சிருக்கா? தா: உம்--நடிப்பு? சம: நடிச்சுதா? நான் கவனிக்கலே--ஓ பேஷ்! பேஷ்! பேஷ்--நல்ல நடிப்பு. பேஷ் பேஷ்--பிரமாதம்! பிரமாதம்!