களஞ்சியப் பகுதி 3

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[கீதா நடனமாடுகிறாள். (முடிவுற்றதும்)] பாபு: ஹா...ஹா...! சபாஷ் கீதா! சபாஷ்! புழுவைப் போல் நெளிந்து புள்ளி மயிலைப்போல் ஆடிவிட்டாய்... அய்யோ அய்யோ... அய்யோ... எக்கச்சக்கமான அபிநயம், ஏராளமான முகவெட்டு, அசைவு கிசைவு, வலைவு கெளிவு எல்லாம் அபாரம்! அபாரம்!! தாயம்மாள்: அப்பப்பா! என்ன திருஷ்டி, ஹும்! பாபு: ரொம்ப களைப்பாயிருக்கும், ஏய் யாரங்கே!... காபி சாப்பிடுகிறியா? கீதா: ஊஹும். பாபு: கூல்ட்ரிங்...? கீதா: ஊக்கும்... தாயம்: இந்தக் காலத்துப் பெண்கள் நாலு குதி குதிச்சாலும், மேமூச்சு, கீழ்மூச்சு வாங்குது. எங்க காலத்திலே நாங்க ஆட ஆரம்பிச்சோம்னா, ஒண்ணுகால் முறியணும்; இல்லாட்டி மேடை முறியணும்! ஹி...ஹி... அப்படி ஆடுவோம் தம்பி! பாபு: ஏன், இப்பத்தான் என்ன. நீங்க ஆடாமலே மேடை கிடை யெல்லாம் தூள் தூளாப் பறக்குமே! தாயம்: உம்... அது கிடக்க பழைய கதை, என்னமோ தம்பி, என் பொண்ணு உக்களையே நம்பியிருக்கு! பாபு: இருக்கட்டும்; இருக்கட்டும்! தாயம்: அவளை ஆளாக்க வேண்டியது உங்க பொறுப்பு. வேலைக்காரி: (அங்கு வந்து) உங்களைப் பார்க்கணுமாம், யாரோ ஒரு பொம்பளை வந்திருக்காங்க. பாபு: ஆ! பொம்பளையா? யாரது? ராணி: உம் வணக்கங்க! என் பெயர் ராணி. பாபு: யாரு? என்ன வேணும்? ராணி: ஒங்க நாடகத்துக்கு டிக்கட் விற்பனை செய்ய ஒரு பெண் தேவை யென்று கேள்விப்பட்டேன். பாபு: ஆமாம், ஆமாம். தேவைதான்; தேவைதான். இப்படி உட்காரேன்! ராணி: உம், பரவாயில்லையிங்க, அந்த வேலையை எனக்குக் கொடுத்தால்—— பாபு: உம், பாடத் தெரியுமா? தாயம்: என் பொண்ணுக்கு ஆடவும் தெரியுமே! பாபு: அடாடா - இது வேற சிவ பூசையிலே கரடி மாதிரி பூந்துகிட்டு. கீதா: அம்மா, நீ சும்மா இரும்மா! பாபு: பரவாயில்லை ராணி! நாளைக்கு நாடகம் நடக்கம் போவது—பிறகு தொடர்ந்து நாடகங்களை நடத்திக்கிட்டே இருக்கப் போகிறோம்! நாங்களெல்லாம் 'அமைச்சூர்ஸ்'—அதிகமா சம்பளம் எதிர்பார்க்கக்கூடாது. ராணி: சம்பளத்தைப் பத்தி என்னங்க, பாபு: உம், நீ நாளைக்கு டிக்கட்டு விற்கிற திறமையைப் பாத்துகிட்டு அப்புறம் சம்பளம் போட்டுத் தர்ரோம், ராணி: ரொம்ப நன்றிங்க! பாபு: ஹே ஹே!