களஞ்சியப் பகுதி 1

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[ஞானக்கண் மேசையின் மேல் படுக்கவைக்கப் பட்டிருக்கிறார். சுற்றிலும் டாக்டரும் உதவியாளர்களும் நிற்கிறார்கள். ராணி வெளியே உட்கார்ந்திருக்கிறாள். பையன் வருகிறான்.] பையன்: அம்மா! டாக்டர் உங்களைக் கூப்பிடுறாரு... [ராணி வருகிறாள்.] டாக்டர்: சீக்கிரம் குணமாகிவிடும், வருத்தப்படாதீங்க... இப்படி வாம்மா ராணி: என்ன டாக்டர்? டாக்: அப்பா நல்ல வேலையா பிழைத்து விட்டார். ராணி: ரொம்ப 'தேங்க்ஸ்' டாக்டர். அவர் கண்பார்வையெல்லாம் சரியா ஆயிட்டுதா? டாக்: சாதாரண விபத்தா அவருக்கு? பிழைச்சதே ஆபூர்வமாயிற்றே! எதுக்கும் வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப்போயி மருந்தை விடாமல் சாப்பிடட்டும், பின்னாலே பார்ப்போம்! ராணி: அப்படின்னா... அவன்கண்...? டாக்: அப்போதே முன் கூட்டியே சொல்லியிருக்கேனேயம்மா—அவருக்கு வயது ஆயிடுச்சு. இனி கண்பார்வை வருவது சந்தேகந்தான்! ராணி: அப்பா...!