காட்சி 42

காட்சி 42

45 பகுதிகளில்

குமரன் :- என் மீனுவை பார்த்தீர்களா? இந்தக் கொடிய முகத்தை பார்க்கக்கூடாது என்று குருடியாகி விட்டாள். மீனு :- குழந்தையின் முகத்தை பார்க்க முடியாத பாவியாகி விட்டேன்! முத்து...நீ எப்படி இருக்கிறாய்? உன் அப்பாவைப் போல் சிகப்பாகவா இருக்கிறாய்? என் வேஷம் பார்த்தால் உனக்கு பிச்சைக்காரி போலவா தெரிகிறது? நான் பிச்சைக்காரி அல்ல! ஜமீன்தார் மனைவி! ஓங்க அப்பா ஜமீன்தார்! குமரன் :- மீனு......அந்தத் தேவையற்ற கிரீடத்தை நான் தேடியதே இல்லை! பொருள் எல்லாம் பொதுவுடமையாக்க எண்ணினேன். ஆனால்......அந்த ஆசை நெருப்பிலே விழுந்து உயிர் சாம்பலாகி விட்டது. மீனு :- சாம்பலாகவில்லை. உயிர் இருக்கிறது. குமரன் :- உயிர் இருக்கிறதா? மீனு :- ஆம்...வைத்தியரிடம் இருக்கிறது. குமரன் :- ஜீவானந்தரே! மக்களுக்கு புது வாழ்வு கிடைத்து விட்டது! (உயிலை கைப்பற்ற குமரன் வைத்தியனிடம் ஓடுகிறான்)