காட்சி 41
காட்சி 41
45 பகுதிகளில்
("குமரன் வழக்கு தீர்ப்பு. குமரனின் வேகம் நிறைந்த ஆர்க்குமெண்ட். தீர்ப்பை அறிய மக்கள் ஆவல்") நீதிபதி :- இருதரப்பு வாதங்களைக் கொண்டும்-சாட்சிகளையும் ஆராயும்போது குமரன் புரட்சிக்காரன், பலாத்கார வாதி, கடவுள் நிந்திப்பவன் என்று தெரியவில்லை. மக்களை படிக்கச் சொல்லுவது, ஏகமனதான கடவுளை கும்பிடுவது இதுபோன்ற காரியங்கள் புரட்சிக்காரனுக்கோ, பலாத்கார வாதியாகவோ இருந்துவிட முடியாது! ஜமீன் ஒழிக்க சர்க்கார் நடவடிக்கை எடுத்துவரும் இந்நாளில் குமரன் ஜமீன்தாரின் அட்டகாசங்களை அடக்கவே பாடு பட்டிருக்கிறான். ஆகவே...குமரன் குற்றமற்ற நிலையில் விடுதலை செய்யப்படுகிறது. (குமரன் வெளியேறி வரும்போது...(குருடி)மீனு பிச்சைக்காரியாக) மீனு :- அய்யா......காலணா......போடுங்கய்யா குமரன் :- ஆ...இது யார் குழந்தை? மீனு :- என் குழந்தை தானய்யா! குமரன் :- அய்யோ...என் மீனு விபச்சாரி! என் மீனு விபச்சாரி! ஜீவானந்தர் — குமரன்! குமரன்! மீனு :- ஆ...என் குமரா! குமரன்...குமரன்... குமரன் :- சீ...தொடாதே காலை! மீனு :- குமரன்! இது என் குழந்தை அல்ல! இக் குழந்தையைப்பற்றி கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்று பாருங்கள்! கடிதத்தில் :- "இக்கடிதத்தைக் காணும் கருணை உள்ளம் படைத்தவர்களே...மேல் ஜாதிக்காரனின் காதலை நம்பிக் கைவிடப்பட்டவளின் கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள். இந்தக் குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்கள்." இப்படிக்கு—சுந்தரி. குமரன் :- மீனு...சுந்தரி...சுந்தரி...மீனு...நம்குழந்தை- குழந்தை முத்து என்னிடம்தான் இருக்கிறான் மீனு உன்மீனு :- ஆ...என் குழந்தையா...... (குமரன் மீனுவை அழைத்துச் செல்லுகிறான்)