காட்சி 38
காட்சி 38
45 பகுதிகளில்
மலையப்பன் :- டேய்! அண்ணுமலை! என்னடா திமிர் இந்த ஊருப்பயல்களுக்கு! நான் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறேன். வரவேற்கிறதுக்கு ஒரு பயலும் காணோம்! அண்ணுமலை :- அமெரிக்கா என்னங்க? சொர்க்க லோகத்திலே இருந்து வந்தாலும் கவனிக்க மாட்டாங்க! முன்னேற்றம் தலைவிரித்தாடுது! ஜனங்கள் பூராவும் குமரன் பேச்சைத்தான் கேட்குது. மலையப்பன் :- குமரன்! போய் கூட்டிவாடா! அண்ணுமலை :- யாருங்க? மலையப்பன் :- பூசாரி, புரோகிதர். வைத்தியர் எல்லோரையுமே. (அண்ணுமலை போகிறான்) பூசாரி :- கிணத்துத் தவளையா இருந்தவங்களே...பேப்பர், புத்தகம் படிக்கவைச்சி கெடுத்துட்டான். புரோகிதர் :- படிக்க ஆரம்பித்தாலே—விழிக்க ஆரம்பித்தது மாதிரிதானே! மலையப்பன் :- முட்டாள்களே; இத்தனை நாளும் விட்டு விட்டு இப்போது வந்து முறையிடுகிறீர்கள். நான் இருக்கிறேன்—எனது பணம் இருக்கிறது. புரோகிதர் :- பகவானும் இருக்கான். மலையப்பன் :- ஏய்...பூசாரி...நீயும் கூடப்போ. பூசாரி :- உத்தரவு! (வாசக சாலையும், கல்விக்கூடமும் கயவனின் கட்டளையால் கலைக்கப்படுகிறது) மலையப்பன் :- டேய்! நம்ம மாளிகையின் வாசலை இடித்தெறி! அண்ணுமலை :- இடிக்கவா? மலையப்பன் :- இவ்வளவு பெரிய மாளிகைக்கூடாது என் பதற்காக இல்லேடா இளிச்ச வாயா! இடித்தெறி! சொல்கிறேன். அண்ணுமலை :- ஆச்சிங்க. மலையப்பன் :- டவுனுக்குப் போயி போலீஸை கூட்டிவா! வண்டிலே போ......ரெண்டு மணிநேரத்திலே சீக்கிரம் வரணும்! (அண்ணுமலை போகிறான்)