காட்சி 36
காட்சி 36
45 பகுதிகளில்
(இடம்:-ரோடு) குமரன் :- ஜீவானந்தரே! தலைவிதியை காரணம் காட்டி மக்கள் தரித்திரத்தில் தள்ளுவது தவறு. மக்களை மக்களாக்கி எதற்கு அடிமையாகாமல் தடுப்பதுதான் சீர்திருத்தம்! ஜீவானந்தர் :- அந்த வேலையை இன்றே ஆரம்பிப்போம். குமரன் :- மீனு இருந்தால் எவ்வளவோ உதவியாக இருந்திருக்கும். ஜீவானந்தர் :- மீனு ஜமீன்தாருடன் அமெரிக்காவுக்குத் தான் போயிருப்பாள். (குமரனும், ஜீவானந்தரும் கிராம சேவையில் ஈடுபடுகின்றனர்.) ### 7 குமரன், கிராமவாசிகள் புதியதோர் பாதை வகுப்போம்—நாம்—கெட்ட போரிடும் பாதையை சாய்ப்போம் நாம்...... நித்தம் உழைத்தே உயர்வோம் நாம்— நெறி தவறாமல் வாழ்வோம் நாம்— அருஞ்ஞானப் பாரம் வெளியையே—நல் அறிவாகும் ஏர் முனையிலே... அறிவாகும் ஏர் முனையிலே... விஞ்ஞானப் பேரறிவினில்—உழுதே மெய்ஞ்ஞானம் காண்பவர்கள் நாம்! ### 8 மாத்திரை வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே அருமை மிகுந்த எங்கள் அறிஞர் அண்ணா வாழ்கவே குமர அண்ணா வாழ்கவே. பெருமை பேசும் மனிதரெல்லாம் எதற்கெடுத்தாலும் எருமை போல தலையசைப்பதை உரிமைக்காக எதிர்த்து நிற்கும் அண்ணா வாழ்கவே எங்கள் அண்ணா வாழ்கவே. புழுவாகத் துடிக்கின்ற ஏழை கழுகாகப் பறக்கின்ற சீமான்—இந்தப் பொல்லாத பேதங்கள் எல்லாம் இல்லாத பொன்னுடைமைச் செய்தார்—அந்த அண்ணா வாழ்கவே குமர அண்ணா வாழ்கவே- எலியாக வாழ்கின்ற விதவை புலியாக தருகின்ற இளமை புலியாக பாய்கின்ற பழமை மலிவாகப் போன இக்கொடுமை மாற்றிடும் அண்ணா வாழ்கவே ! குமர அண்ணா வாழ்கவே. சில சில இடங்களில் பணத்தோட்டம்—அது செல்வக் குமரி...கோட்டம்! இப்படிப் பலபல கருத்துக்கள் சொல்லும் தேனாறு பகுத்தறிவூட்டும் லட்சிய வரலாறு— அண்ணா வாழ்கவே குமர அண்ணா வாழ்கவே.