காட்சி 25
காட்சி 25.
45 பகுதிகளில்
சஞ்சீவி :- பைத்தியக்காரப் பெண்ணே! நான் போட்டிருந்த திட்டத்தை ஒரு நொடியில் பாழாக்கி விட்டாய்! பிரேமா :- என்னே மன்னிச்சிடுங்கப்பா! சஞ்சீவி :- மன்னிப்பதற்கு நீ எனக்கா கேடு செய்து விட்டாய்? உன் தலையில் நீ மண்ணைவாரிப் போட்டுக் கொண்டாய். பிரேமா :- உயில் இல்லாவிட்டால் திருமணம் இல்லை என்றாருப்பா! சஞ்சீவி :- இப்போது உயிலைகொடுத்தவுடன் விவாக சுப முகூர்த்தத்துக்கு தேதி குறித்து விட்டானுக்கும்? பிரேமா :- தேதி குறிக்கவில்லை! சஞ்சீவி :- பின்னே...திருமணத்துக்கு நிச்சயம் ஆகி விட்டதாகுமா? எப்படியாவது போயித் தொலை... [கதவு தட்டப்படுகிறது] சஞ் :- யாரது? போயி பாரு பிரேமா... (கதவைத் திறக்கிறாள்) [குமரன் வெந்த உடலுடன் வந்து விழுகிறான்.]