காட்சி 23

காட்சி 23.

45 பகுதிகளில்

இடம் :—குமரனது குடிசை. (இரவு நேரம்) (பிரேமா உயிலை குமரன் மீது தூக்கி எறிகிறாள். தூங்கிக் கொண்டிருந்த குமரன் துரிதமாக எழுந்திருக்கிறான்) கும :- உயில்...உயில்...என் உயிர்! பிரே :- மெதுவா... கும :- பிரேமா...நீயா கொண்டு வந்தாய்? பிரே :- பிறகு யார் கொண்டு வருவார்கள் ஜமீன்தாரே? கும :- நான் ஜமீன்தார் அல்ல! ஜனங்களின் ஊழியன்—மக்கள் தொண்டன்! இந்த உதவியை மறக்க மாட்டேன் சகோதரி! பிரே :- சகோதரி...... (கல்லறையருகே) கும :- அம்மா! உயில் கிடைத்து விட்டது! நீங்கள் தேடி அலைந்த செல்வம் கிடைத்து விட்டது! புதைந்து கிடந்த பொக்கிஷம் அகப்பட்டு விட்டது. இப்போதே போகிறேன் அந்தப் பொல்லாதவனிடம். பிரேமா :- குமரன்...... (குமரன் மல்லயப்பனின் மட்டம் தட்ட புறப்படுகிறான்)