காட்சி 22
காட்சி 22.
45 பகுதிகளில்
பிரே :- குமரனுக்கு ஒண்ணும் பிடிவாதம் இல்லே ..எல்லாம் உங்களுக்குத் தான். சஞ் :- பிரேமா......குமரன் உன்னைத்தான் கல்யாணம் செய்து கொள்வான்—கவலைப்படாதே! பிரேமா! அப்படியே ஏற்பாடுக்கும் போயிட்டு வர்றேன். வீட்டிலே பத்திரமா இரு! டேய் மாத்திரை! அந்தக் கண்ணன் தாயாருக்கு நாம் தானே மருந்து கொடுக்கிறோம்... மாத் :- ஆமாங்க. சஞ் :- என்ன ஆச்சி! மாத் :- சரியாய்போச்சிங்க! வெளியூருக்கெல்லாம் ஆள அனுப்பி வச்சிட்டாங்களாம்! சஞ் :- ஓ......போயி வண்டியை பூட்டுடா! (மாத்திரை போனபிறகு) பிரேமா! முதலில் உயில் கொடுக்க சஞ்சீவி ஏமாளி அல்ல! திருமணம்—பிறகு உயில். பிரே :- திருமணத்திற்குப் பிறகு நீங்கள் ஏமாற்றிவிட்டால்......? சஞ் :- கேடாமல் வருகிற தேவாமிர்தம்! சிரமப்படாமல் வருகிற ஜமீன் மாளிகை! இவற்றை தேவை இல்லே என் பெண்? இதோ பார்...... (உயில் எடுத்து கையில் வைத்துக் கொண்டு) உயில்! உல்லாச ஓடையிலே உன்னை உலவ விடும் படகு! பிரே :- நீங்கள் உயில் இழக்க மாட்டீர்கள்! அவர் உறுதியை இழக்க மாட்டார்! கடைசியாக நான் தான் என் காதலை இழக்க வேண்டும். சஞ் :- காதல்...இந்த உயில் விடவா உயர்ந்தது? இந்த மாளிகையை விடவா மதிப்பு வாய்ந்தது? பிரேமா! பாரேன்—புயல் உன் பாதத்தில் வந்து விழப்போகிறான். ஜாக்கிரதை! யாரிடமும் உதட்டையும் அசைத்து விடாதே! (வைத்தியர் உயிலை வீட்டில் வைத்து விட்டு வெளியூர் புறப்படுகிறார். பிரேமா உயிலுடன் குமரனிடம் செல்லுகிறாள்.)