காட்சி 21
காட்சி 21.
45 பகுதிகளில்
இடம் :—கல்லறை. மணமில்லா மலர் நானம்மா! மாதர் உலகில் வாழ்வே அறியா மணமில்லா மலர் நானம்மா! ஒடிந்து வீண நாதமே இனியேது இடியிதோ வீழ்ந்தே பூங்கா அழிந்ததே மணமில்லா மலர் நானம்மா! வாழ்விலே விஷமே வீசியே மறைந்ததால் மணமில்லா மலர் நானம்மா! வாடிடும் கொடியானேன் சூறாவளிக் காற்றிலே மகரந்த இதழ்மீது மாசு தோய்ந்து மூடிய மணமில்லா மலர் நானம்மா! இன்பச் சுடர் காணேனே இருள் வீட்டில் தனியானேன் துன்பப் புயல் அலை மோதி சோக வாழ்வுச் சோலையில் மணமில்லா மலர் நானம்மா! (மீனு சோகத்துடன் பாடிக் கொண்டிருக்கிறாள். குமரன் அங்கு வருகிறான்.) கும :- மீனு... மீனு :- குமரன்...... (அழாதே மீனு)... கும :- என்னை மன்னித்து விடு மீனு! ஆமா...இந்த இருட்டில் நீ எப்படி தனியாக வருகிறாய்? வரலாமா இப்படி யெல்லாம்? மீனு :- வரக் கூடாது தான்! ஆனால்...என் வாடிப் போன நெஞ்சிற்கு இது வரையிலும் என் மாமியின் சமாதி தானே ஆறுதலாக இருந்தது. கும :- உன் நெஞ்சு இன்னுமா வாடிப் போயிருக்கிறது? மீனு :- அகத்தின் அழகு முகத்தில் தெரியுமே... கும :- எங்கே...பார்க்கலாம். (மீனு சிரிக்கிறாள்).