காட்சி 20
காட்சி 20.
45 பகுதிகளில்
இடம் :—மல்லயப்பர் மாளிகை. (இரவு நேரம்) மல்ல :- ஞானம்! நான் படுத்திருக்கிறேனே பஞ்சணை! நீ உடுத்தி இருக்கிறாயே பட்டுச் சேலை! இதற்கெல்லாம் சொந்தக்காரன் இன்னும் உயிருடன் தான் உலவுகிறான். அவன் ஒழிந்தால் தான் எனக்கு நிம்மதி. ஞானம் :- ஒழிந்து விடுவான்! மல் :- எப்படி ஒழிவான்? நீ மாத்திரம் நிதானமாக அந்த விஷத்தை கொடுத்திருந்தால் அவன் அன்றே ஒழிந்திருப்பான். ஞானம் :- நான் என்ன செய்வேன்? மீனு அவனுக்கு வைத்திருந்த பாலில் தான் விஷத்தை கலந்தேன். அதை அவன் அவனது தாய்க்கு கொடுப்பான் என்று எனக்குத் தெரியுமா! (இதைக் கேட்ட குமரன் மீனுவை நிரபராதி என்று அறிந்து வெளியேறுகிறான்.)