காட்சி 19

காட்சி 19.

45 பகுதிகளில்

இடம் :—கல்லறை. “குமரா! எப்படியாவது அந்த உயில் கண்டு பிடித்து விடு” (இது நாராயணியின் வேண்டுகோள்) “வழக்கு நடத்த பணம் தேவை! பிறகு உயிலைத் தேடு” (இது வைத்தியரின் குரல்) கும :- பணத்தை தேடி விட்டேன். உயில்... ஆம் மல்லயப்பரின் மாளிகையில்...அங்கே மீனு இருந்தாள்...ஓ...சதிகாரி... அவளை ஏன் நான் பார்க்கிறேன். உயில்... இல்லாவிட்டால் உயிர்...... (உயிலைக் திருட குமரன் ஓடுகிறான் மல்லயப்பரின் மாளிகையை நோக்கி)