காட்சி 18
காட்சி 18.
45 பகுதிகளில்
மாத் :- சும்மா வா! வெட்கப்படாதே! கும :- என்ன மாத்திரை! மாத் :- உன் கிட்டே சொல்லாமலே...சிக்கணமா...உன் விலாசம் வேற எனக்குத் தெரியலே. கும :- விஷயத்தைச் சொல் மாத்திரை. மாத் :- இவரு எனக்கு மாமனாராகவும் (ஜீவானந்தர்) நான் அவருக்கு மருமகனாகவும் ஆயிட்டோம்! என் மனைவி தைலம்! கும :- அட...மாத்திரை—தைலம்! ரொம்ப நல்லா இருக்கு! மாத் :- ஜாதகப் பொருத்தம் இல்லாவிட்டாலும், மருந்து முறைப்படி ரொம்பவும் பொருத்தம். கும :- அப்போ...... இதை உங்களுக்கு பரிசாக அளிக்கிறேன். (குமரன் வெளியேறுகிறான்.) எல்லோரும் இருங்கள்! நான் என் தாயார் வீட்டுக்குப் போய் வருகிறேன்! பிறகு சந்திப்போம். (குமரன் போகிறான்) (“குமரன் வாழ்க” என்ற குரல் கூட்டத்தில் கிளம்புகிறது.)