காட்சி 14

காட்சி 14

45 பகுதிகளில்

(குமரன் சென்னையிலே கூலிக்காரனாக) பீமசேனன் :- டேய் தம்பி! இங்கே வா! இந்தப் பெட்டியை தூக்கிட்டு வர்றியா? குமரன் :- ஓ— பீமசேனன் :- தூக்கு...தலையிலே... [கந்தசாமி வீடு] கந்தசாமி :- ஹல்லோ...இப்போதான் வர்றீங்களா? பீமசேனன் :- ஆமா...டேய்...பெட்டி படுக்கையைக் கொண்டு உள்ளே வை ஹூம்...அவன் சத்திய சீலன் வந்தாச்சா? கந்தசாமி :- வந்தாச்சி. பீமசேனன் :- வர்ற வழியிலே பார்த்துக்கிட்டேதான் வந்தேன். விளம்பரம் ரொம்ப தடபுடல். கந்தசாமி :- மிஸ்டர் பீமசேனன்! நான் ஒரு காண்டிராக்ட்காரன்! பணத்தை மிச்சம் பண்ணணுங்குற அபிப்பிராயமே எனக்கு கிடையாது. (ஆரஞ்சுப்பழமும் வைக்கப்படுகிறது) சாப்பிடுங்க! பீமசேனன் :- பரவாயில்லே...நீங்க கந்தசாமின்னு கந்தசாமிதான். குமரன் :- அய்யா...அய்யா... கந்தசாமி :- யாரது? குமரன் :- மூட்டை தூக்கிட்டு வந்தவன். பீமசேனன் :- ஓ...ஹோ...மறந்துட்டேன். இந்தா ஒரு அணா. குமரன் :- ஒரு அணா! பீமசேனன் :- பின்னே எவ்வளவுடா? குமரன் :- ஏதோ பார்த்துக் கொடுங்க. பீமசேனன் :- இந்தப் பயல்கிட்டே முதல்லே பேசிக் கிடாததே தவறு! டேய்...மரியாதையா போயிரு. குமரன் :- எவ்வளவு தூரம் தூக்கிட்டு வந்தேன். பீமசேனன் :- அதுக்கு வேறையா பேசுறே? டேய்...போறியா? உதை வேணுமா? குமரன் :- கூலி கேட்டா உதையா! கந்தசாமி :- டேய்...கொடுக்கிறதை வாங்கிட்டுப்போடா. குமரன் :- எதை...உதையையா? பீமசேனன் :- டேய்...இப்போ போறியா இல்லையா? குமரன் :- சிலருக்கு பணக் கொழுப்பு, சிலருக்கு சதைக் கொழுப்பு! பீமசேனன் :- டேய்...என்ன சொன்னே? என்னடா சொன்னே...கந்தசாமி தடுக்கிறான். (குமரனுக்கும், பீமசேனனுக்கும் சண்டை மூளுகிறது) கந்தசாமி :- மிஸ்டர் பீமசேனன்! நீங்க இப்பவே குத்துச் சண்டை போட்ட ஆரம்பிச்சுட்டா ஜனங்கள் டிக்கட் இல்லாமே பார்த்துட்டுப் போயிடு வாங்க. எனக்கு வசூல் வசூல்தான். பீமசேனன் :- விடுங்க மிஸ்டர் கந்தசாமி! இந்தப் பசங்களே சும்மா விடக்கூடாது. (குமரன் ஜெயித்து விடுகிறான்) கந்தசாமி :- மிஸ்டர் பீமசேனன்! ரொம்பவும் டயர்டா இருக்கீங்க—பாவம் இளைப்பாறுங்க—நான் இதோ வர்றேன். பீமசேனன் :- பரவாயில்லே...என் கையை வேறிலே சுமட்டிக் கிட்டான். (கூலியாக வந்த குமரன் குத்துச் சண்டை வீரனாக மாறுகிறான்.)