காட்சி 9
காட்சி 9.
45 பகுதிகளில்
[மல்லயப்பர் வரி வசூலுக்கு புறப்படுகிறார்] இடம் :- ரோடு மல் :- என்னடா? கும :- அது எழுந்திருக்காதுங்க. மல் :- அப்புறம்...? என்னே நடந்து போகச்சொல்றியா? ஒரு பக்கத்தை நீ பிடிச்சி இழுடா. (குமரன் மாட்டுக்குப் பதில் தானே வண்டியை இழுத்துச் செல்லுகிறான்). இடம் :- மாளிகை வாசல் மல் :- டேய்! மாடு ரொம்ப களைச்சிருக்கும்! போயி தண்ணி காட்டு! தண்ணி காட்டிட்டு அந்த நொண்டி மாட்டைப் போயி கூட்டிக்கிட்டுவா. என்னே...... (மாடியில் நின்று இதைக் கண்ட நாராயணி மயக்கம் அடைகிறாள்). கும :- போதும் கஷ்டம், இனி பொறுக்க முடியாது. (குமரன் மாடிக்கு ஓடுகிறான்—மயக்கமடைந்த தாயைக் காண.) கும :- (அன்பு அன்னையை அணைத்து) அம்மா...என்னம்மா செய்யுது? நாரா :- இந்தப்பாழும் கண்கள் இன்னும் ஏன் இருக்கிறது? வாழ்க்கை வண்டியிலே நீயும்—என் மருமகளும் பூட்டப்பட்டு அந்தச் சோபிதத்தை சுவைக்க வேண்டுமென்று கனவு கண்டேனடா! கனவு மறைந்து கானல் மாடுமே—என் மகனும் வண்டியை இழுப்பார்கள் என்று இந்தக் காதியின் நெஞ்சம் நினைக்கக்கூட இல்லை. கும :- அம்மா...இப்போதே அனுமதி கொடுங்கள்—வெளியேறி விடுவோம். நாரா :- வேண்டாம்டா கண்ணு...உன்னைவிட கொதித்துப் போனதுதான் என்னுடைய இரத்தமும். ஆனால்...அந்த ஒரு விஷயத்துக்காகத்தான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். கும :- அடிக்கடி சொல்கிறீர்களே...என்னம்மா அந்த இரகசியம்? நாரா :- உன்னைச் சீமானாக்கும் இரகசியம் மல்லயப்பனிடம் சிக்கி இருக்கிறது. [ஞானம் ஒட்டுக் கேட்கிறாள்.] (காட்சி மாறுகிறது) மல்ல :- விஷயத்தைச் சொல். ஞா :- என்னத்தை சொல்றது? கழுத்துக்கு கத்தி வைக்க காத்திருக்காங்க—தாயும்—பிள்ளையும். மல்லயப்ப :- விபரமாகச் சொல் ஞானம்! ஞா :- உங்களை குமரன் கொல்லுவதற்கு கொக்கரிக்கிறான். அவன் சீமானாக்கும் இரகசியம் உங்களிடம் சிக்கி இருக்கிறதாம்! இதை நாராயணி குமரனிடம் சொல்வதை இந்தக் காதாலே கேட்டேன். மல்லயப்ப :- இரகசியம்...இரகசியம் அந்த உயில்தான்...ஞானம்! இவள் நாராயணி அல்ல—வேலைக்காரி வேஷத்திலே வேதவல்லி! விடக்கூடாது இவர்களை—விபரீதம் ஏற்பட்டு விடும். (இருவரும் தனிமையில்) ஞா :- இப்படி என்னையும் மறந்து கவலைப்படுவீர்கள் என்று தெரிந்திருந்தால் சொல்லி இருக்கவே மாட்டேன். மல்லயப்ப :- போறு ஞானம்! இவர்களை விடக்கூடாது! ஞானம் இதோ பார்! (என்று கூறி விஷ புட்டியைக் காட்டுகிறான்) ஞா :- பாய்சன்! மல்லயப்ப :- விஷம் என்னிடம்—விவேகம் உன்னிடம் அந்தப் பிச்சைக்கார குமரனை பிணமாக்கவேண்டும். ஜாக்கிரதை! சதி செய்வது ஒரு ஜாலவித்தை! அதற்கு நீதான் சரியானவள்! இன்று அவசரமாக நான் வெளியூர் போகிறேன். இரவு திரும்பிவருவதற்குள் அந்த நாயின் சவத்திலே தீ பரவ வேண்டும்.