காட்சி 7
காட்சி 7
45 பகுதிகளில்
(அநேகர் வருகின்றனர் ஒரு ஆட்டை பிடித்துக் கொண்டு, அதில் மாத்திரையும் ஒருவன்.) கும :- ஆமா...இந்த ஆட்டுக்கு மாலை போட்டு எங்கே கொண்டு போறீங்க? மாத் :- மாலை போட்ட ஆட்டை எங்கேப்பா கொண்டு போவாங்க? மாட சாமிக்கு பலி கொடுக்கத்தான். கும : மாத்திரை! நீயுமா கூடப்போறே? மாத் :- என்ன பண்றது? ஊரோடே வாழணுமே! நானும் போயித் தொலையிறேன். கும :- ஏய்யா...கடவுள் பெயரைச் சொல்லி இந்த வாயில்லாத ஜீவனை கொல்லப் போறீங்களே...... ஒருவன்:- ஏம்பா ... அப்போ ... நீ கடவுளே இல்லேங்கிறியா? கும :- கடவுளே நான் இல்லேங்கலே...கடவுள்...... [பாட்டு] 1. ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்—பல லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வம எனக் கேளீரோ 2. மாடனைக் காடனை வேடனைப் போற்றி மயங்கு மதியிலிகாள்—எத னூடுநின்றோங்கும் அறிவொன்றே தெய்வமென் றோதியறியீரோ 3. மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து வெறுங்கதைகள் சேர்த்துப்—பல கள்ள மதங்கள் பரப்புதற் கோர்முறை காட்டவும் வல்லீரோ. (உடனே ஆட்டை அவிழ்த்து விரட்டி விடுகிறார்கள்.)