காட்சி 6
காட்சி 6
45 பகுதிகளில்
இடம் :- வைத்தியர் வீடு கும :- என்ன பிரேமா தேடுறே? பிரே :- அப்பா ஒரு நல்ல மருந்து இருக்குன்னு சொன்னாரு! வலி, காயத்துக்கெல்லாம் போட்டால் உடனே சுகம் ஆகி விடுமாம். அதைத்தான் தேடுறேன். கும :- வேண்டாம் பிரேமா...இருக்கிற மருந்தைப் போடு! நீ ஏன் கஷ்டப்படுகிறாய்? பிரே :- உங்களுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லே...... கும :- இந்த அன்பு உள்ளம் உலகத்தில் எல்லோருக்கும் இருந்தால்...... பிரே :- எப்படி இருக்கும்? எல்லோரும் பிரேமா வாகவர் இருக்க முடியுமா? அழகான பூஞ்செடியைப் பற்றி தோட்டக்காரன் தானே கவலைப்படுவான். ஆடுமாடுகளா கவலைப்படும்? கும :- நல்ல வேளை...ஞாபகப்படுத்தினாய்...மறந்தே போய் விட்டேன். மாட்டை ஓட்டிக் கிட்டுப் போகணும். இல்லாட்டா அந்த ஜமீன்தாரு கத்துவாரு! நான் வாறேன். பிரே :- ஏன்...இப்படி...கொஞ்சம் கூட ஓய்வு வேண்டாமா? கும :- நீ ஒரு பைத்தியம்! ஏழைகளின் ஓய்வுக்கு இந்த உலகத்திலே சோம்பேறி என்று அர்த்தம். (குமரன் போகிறான். எதிரே மாத்திரை வருகிறான்.) மாத் :- “ஓரிடந்தனிலே...நீ யில்லா துலகினிலே...உருண்டோடிடுமே...ப......” கும :- என்ன மாத்திரை? மாத் :- ஓட ஓட துரத்தி அந்த உடம்பு எண்ணெயை அவன் தலையிலேயே கட்டிட்டு வந்துட்டேன். கும :- அய்யோ...பாவம்...... மாத் :- நான் ஓடினது ஒண்ணும் பாவம் இல்லே...ஒரு ரூபாய் கொடுத்து அந்த எண்ணெயை வாங்கிட்டுப் போனேனே...அது தான் பாவம். பிரே : எய்...மாத்திரை! மாத் :- அய்யய்யோ...நாய்க்குட்டி செத்துடுமே. (குமரன் போன திசையை நோக்கி பிரேமா நிற்கிறாள்)